டெஸ்லாவின் சைபர்கேப் ரோபோடாக்ஸி எப்போது இந்தியாவுக்கு வரும்? தானியங்கி கார் விலை என்ன?

Tesla Cybercab Before 2027 : டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க், டெஸ்லாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, சைபர்கேப் (Cybercab) ரோபோடாக்ஸியை வெளியிட்டார். இந்த ரோபோடாக்ஸியின் விலை 30,000 அமெரிக்க டாலர்களுக்கும் குறைவாக இருக்கும் என்று மஸ்க் உறுதியளித்தார். அத்துடன், அடுத்த ஆண்டு கலிபோர்னியா மற்றும் டெக்சாஸில், ரோபோடாக்ஸி மாடல் 3 மற்றும் மாடல் Y கார்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.

ரோபோடாக்ஸி அறிமுக நிகழ்ச்சி

கலிபோர்னியாவின் பர்பாங்கில் உள்ள வார்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோவில் We Robot நிகழ்வில் இந்த ரோபோடாக்ஸி அறிமுகம் செய்யப்பட்டது.  சைபர்கேப்பில் வந்திறங்கிய டெஸ்லாவின் எலோன் மஸ்குடன், விண்வெளி உடை அணிந்திருந்த ஒரு நபரும் இருந்தார். அதேபோல், அங்கு கூடியிருந்தக் கூட்டத்தில் மனிதனைப் போன்ற ரோபோக்கள் நடனமாடிக் கொண்டே விருந்தினர்களுக்கு பானங்களை வழங்கியதும் வித்தியாசமான நிகழ்வாக இருந்தது.

அந்த நிகழ்ச்சியில், எலோன் மஸ்க் வந்த ரோபோடாக்ஸியைத் தவிர, மேலும் 20 சைபர்கேப்கள் இருந்தன. நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள், நிகழ்ச்சி நடைபெற்ற 20 ஏக்கர் இடத்தில் ரோபோடாக்ஸியில் பயணித்து அனுபவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

Robotaxi pic.twitter.com/zVJ9v9yXNr

— Tesla (@Tesla) October 11, 2024

ரோபோடாக்ஸி சிறப்பம்சங்கள்

டெஸ்லாவின் சைபர்கேப்பில் ஸ்டீயரிங் வீல் அல்லது பெடல்கள் இருக்காது. டெஸ்லா அமேசான் வெப் சர்வீசஸ் கம்ப்யூட்டிங் பாணியில் வாகனங்களில் உள்ள கம்ப்யூட்டரை “ஓவர்ஸ்பெக்ட்” செய்துள்ளது, இது கார்களின் நெட்வொர்க் முழுவதும் விநியோகிக்கப்படுகிறது.

இந்த சைபர்கேப் 2027ஆம் ஆண்டுக்கு முன்னதாக புழக்கத்திற்கு வந்துவிடும் என்று எலோன் மஸ்க் நம்பிக்கைத்ட் ஹெரிவித்துள்ளார். இந்த ரோபோடாக்ஸியை வாங்குபவர்கள், பயன்படுத்தாமல் நிறுத்தி வைத்திருக்கும்போது, உபெர் போன்ற டாக்சிகளாகப் பயன்படுத்தலாம் என்றும் மஸ்க் தெரிவித்தார்.

ரோபோடாக்ஸி பாதுகாப்பு 

மில்லியன் கணக்கான வாகனங்களில் இருந்து ஓட்டுநர் தரவுகளை சேகரித்து டெஸ்லா இந்த ரோபோடாக்ஸியை வடிவமைத்துள்ளதால், மனிதர்கள் ஓட்டுவதை விட கார்கள் பாதுகாப்பானதாக இருக்கும் என்றும், இது சோர்வடையாது, மனிதனை விட 10, 20, 30 மடங்கு பாதுகாப்பானதாக இருக்கும் என்றும் எலான் மஸ்க் கூறுகிறார்.  

ரோபோவேன்

20 பேர் பயணிக்கக்கூடிய மற்றும் பொருட்களை எடுத்துச் செல்லக்கூடிய ரோபோவேன் என்ற தானியங்கி வேன் தொடர்பான தகவலையும் எலோன் மஸ்க் வெளியிட்டார். ஆனால் அதன் விலை அல்லது எப்போது சநதைக்கு வரும் என்பது போன்ற தகவல்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.