தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். மின்னலே, அந்நியன், காக்க காக்க உள்ளிட்ட பல ஹிட் தமிழ்த் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இசை அமைப்பது என்பது சேவை என்றும், அதற்கான ஜி.எஸ்.டி (சரக்கு மற்றும் சேவை வரி) வரியை ஏன் கட்டவில்லை என்றும் ஹாரிஸ் ஜெயராஜிடம் விளக்கம் கேட்டு, 2018-ம் ஆண்டு ஜி.எஸ்.டி இணை இயக்குநர் நோட்டீஸ் ஒன்றை அனுப்பினார்.
அதைத்தொடர்ந்து, “இசை மெட்டு என்பது ஒரு படைப்பாகும். அதற்கான நிரந்தர பதிப்புரிமை தயாரிப்பாளர்களுக்கே வழங்கப்படுகின்றன. அதனால், அந்தப் படைப்புகளுக்கு ஜி.எஸ்.டி வரி விதிக்க முடியாது. ஜி.எஸ்.டி இணை இயக்குநரின் நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும்” என்று 2019-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இணை இயக்குநரின் நோட்டீஸை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்.
தற்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார் மற்றும் சி.சரவணன், “வரி கேட்டு அனுப்பப்படும் நோட்டீஸுகளை எதிர்த்து வழக்குத் தொடர முடியாது.
இதற்கு முன்பு, இதே மாதிரியான வழக்கைத் தொடர்ந்த வேந்தர் மூவீஸ், வொண்டர்பார் ஃபிலிம்ஸ் போன்ற சினிமா தயாரிப்பு நிறுவனங்களின் வழக்குகளில் உயர் நீதிமன்ற டிவிசன் பெஞ்ச், ‘நோட்டீஸ் அனுப்பிய அதிகாரியிடமே இவ்விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்து விலக்கு பெறலாம்’ என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன்படி, ஹாரிஸ் ஜெயராஜும் ஜி.எஸ்.டி இணை இயக்குநரிடம் விளக்கம் கூறி விலக்கு பெறலாம்” என்று தீர்ப்பளித்திருக்கிறது.
மேலும், “ஹாரிஸ் ஜெயராஜ் கொடுத்த விளக்கத்தைப் பரிசீலித்து 4 வாரங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும்” என்று சென்னை உயர் நீதிமன்றம் ஜி.எஸ்.டி இணை இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…