மைசூரிலிருந்து சென்னை வழியாகப் பீகார் மாநிலம், தர்பங்காவுக்கு ‘பாக்மதி எஸ்பிரஸ்’ ரயில் நேற்று (அக். 12) இரவு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது லூப் லைனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் பயங்கரமாக மோதியது. இதில், ரயில் பெட்டிகள் ஒன்றின் மீது ஒன்று மோதியது. இந்த விபத்தில் சில ரயில் பெட்டிகள் தடம் புரண்டன.
இந்த விபத்து குறித்து நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “சரக்கு ரயிலோடு பயணிகள் ரயில் மோதிய பாலாசூர் பயங்கர விபத்தைப் போலவே, தற்போது நடந்துள்ள மைசூரு – தர்பங்கா ரயில் விபத்தும் உள்ளது.
பல்வேறு விபத்துகளில் பல உயிர்களை இழந்தும், அரசு இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. இந்த விபத்துக்களுக்கான பொறுப்பு மேலிடத்தைச் சேர்ந்தவர்களையே சாரும். இந்த அரசு விழித்துக்கொள்ள, இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிய வேண்டும்?” என்று கேள்வி எழுப்பி ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb