’உன்னை பத்தி எனக்கு தெரியும் சஞ்சு’ சாம்சனுக்கு வந்த சர்பிரைஸ் வாழ்த்து, ரசிகர்கள் செம ஹேப்பி

Sanju Samson Latest News Tamil : ஹைதராபாத்தில் நடந்த வங்கதேசம் அணிக்கு எதிராக மூன்றாவது டி20 போட்டியில் ருத்ரதாண்டவம் ஆடிய சஞ்சு சாம்சன் சதமடித்து அமர்களப்படுத்தினார். பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசி ரசிகர்களை குஷிப்படுத்தியதுடன், இவ்வளவு நாட்கள் அவரின் இந்த ஆட்டத்தை பார்க்க காத்திருந்த அவரின் ஆதரவாளர்களும் செம ஹேப்பி. இந்த சதம் மூலம் டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சதமடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமை பெற்ற சஞ்சு, டி20 கிரிக்கெட் போட்டியில் குறைந்த பந்தில் சதமடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரராகியுள்ளார். இதற்கு முன்பு இந்திய டி20 அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா இலங்கை அணிக்கு எதிராக 35 பந்துகளில் சதமடித்திருந்தார். இந்தப் பட்டியலில் சூர்யகுமார் யாதவ் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். 

ஹைதராபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் சஞ்சு சாம்சன் ஓப்பனிங் இறங்கியது முதலே அதிரடியில் கொளுத்தினார். வங்கதேச பந்துவீச்சாளர்கள் எப்படி வீசினாலும் வெளுத்து வாங்கினார். அதுவும் டஸ்கின் அகமது வீசிய இரண்டாவது ஓவரில் தொடர்ச்சியாக நான்கு பவுண்டரிகளை விளாசிய சஞ்சு, ரியாத் ஹூசைன் வீசிய 10வது ஓவரில் முதல் பந்தை தவிர்த்து அடுத்த 5 பந்துகளையும் தொடர்ச்சியாக சிக்சர்களுக்கு விளாசி அமர்களப்படுத்தினார். அவரின் அதிரடி ஆட்டத்தை தடுக்க முடியாமல் வங்கதேச கேப்டன் ஷான்டோ மற்றும் பந்துவீச்சாளர்கள் திக்கு தெரியாமல் திகைத்து நின்றனர். எப்படி போட்டாலும் வெளுத்து வாங்கி நீண்ட நாட்களுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முத்திரை பதித்தார் சஞ்சு. இப்படியொரு ஆட்டத்துக்காக தான் அவர் காத்திருந்தார்.

இப்படியொரு அபாரமான திறமை சஞ்சு சாம்சனிடம் இருக்கிறது என்பதகற்காகவே அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என தொடர்ச்சியாக சப்போர்ட்டும் செய்தனர். அவர்கள் எல்லோருக்கும் மனம் மகிழ்ச்சியடையும் வகையில் நேற்றைய ஆட்டத்தை ஆடிவிட்டார் சஞ்சு. இந்த சதத்துக்காக ரசிகர்கள் ஒருபுறம் சஞ்சு சாம்சனை கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில், அவருக்கு சர்பிரைஸான வாழ்த்து ஒன்றும் வந்துள்ளது. 

 October 12, 2024

அவர் வேறு யாருமல்ல, கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதி எம்பியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சசி தரூர் தான். சஞ்சு சாம்சன் சதமடித்ததை பாராட்டி அவர் போட்டிருக்கும் பதிவில், சஞ்சு சாம்சன் சதமடித்த இப்போட்டியை நான் நிச்சயம் தொலைக்காட்சிகளில் லைவ்வில் பார்த்திருக்க வேண்டும். அந்த வாய்ப்பை நான் மிஸ் செய்தாலும், அவரின் திறமை மீது எப்போதும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இப்படியொரு ஆட்டத்தை அவர் ஆடியது எனக்கு உண்மையிலேயே அளவற்ற மகிழ்ச்சி. சஞ்சு சாம்சனின் திறமை எனக்கு தெரியும். வாழ்த்துகள் சஞ்சு என மனதாரா பாராட்டியிருக்கிறார். அவரின் இந்த பாராட்டும் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.