Proof Of Aliens Existance : புத்திசாலியான வேற்றுகிரகவாசிகள் இருப்பதற்கான சான்றுகளை பூமியில் உள்ள தொலைநோக்கிகள் மூலம் கண்டறிந்துள்ளதாகவும், இன்னும் ஒரு மாதத்திற்குள் ஆதாரங்கள் வெளியிடப்படும் என்றும் நாசாவுடன் தொடர்புடைய திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் உறுதியளித்துள்ளார்.
சைமன் ஹாலண்ட் & வேற்றுகிரகவாசி
திரைப்படத் தயாரிப்பாளர் சைமன் ஹாலண்ட், பிபிசி மற்றும் நாசா நிதியுதவி திட்டங்களுக்கான ஆவணப்படங்களில் பணிபுரிந்தவர். இவர், ஏலியன்கள் தொடர்பாக வெளியிட்ட தகவல்கள் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒரு திட்டத்தில், வேற்று கிரக சிக்னல்களை தேடுவதாக குறிப்பிட்ட சைமன் ஹாலண்ட், “நமது விண்மீன் மண்டலத்தில் மனிதரல்லாத நுண்ணறிவை (ஏலியன்கள்)” அடையாளம் காண முடிந்தது என்றும் தெரிவித்துள்ளார்.
ரேடியோ அலைகள்
ஐந்து மணி நேர ரேடியோ அலைகள் சிக்னல், பூமியில் இருந்து 4.2 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு நட்சத்திரமான ப்ராக்ஸிமா சென்டாரியைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து உருவாக்கப்பட்டதைப் போல தோற்றமளித்தது. ஆக்ஸ்போர்டில் இருந்து வந்த குழு, சிக்னலை ஆய்வு செய்து வருவதாகக் கூறினாலும், அது தொடர்பான ஆதாரத்தை வெளிப்படுத்தவில்லை.
2019 ஏப்ரல் மாதம் 29ம் தேதியன்று விசித்திரமான ரேடியோ சிக்னல் ஒன்று கண்டறியப்பட்டதிலிருந்து, அது தொடர்பான விவாதங்களும், அவை ஏலியன்களிடம் இருந்து வந்திருக்கலாம் என்ற அனுமானங்கள் தொடர்பாகவும் சூடான விவாதங்கள் தொடரும் நிலையில், அந்த விசித்திரமான ரேடியோ சிக்னல் குறித்து DailyMail.com பத்திரிகையிடம் பேசிய சைமன் ஹாலண்ட், ”விஷயத்தைத் உறுதிப்படுத்துவதற்கு முன்னதாக விவரங்களையும், அடிப்படை உண்மைகளையும் தேடுவதால் செய்திகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுகிறது” என்று கூறினார்.
யூடியூபர் ‘பேராசிரியர் சைமன்’ ஹாலண்ட், 100 மில்லியன் டாலர் திட்டமான ‘பிரேக்த்ரூ லிஸன்’ (Breakthrough Listen) மூலம் வேற்றுகிரகவாசிகள் இருப்பதற்கான ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டதை உறுதிப்படுத்தியதாகக் கூறுகிறார். அந்த சிக்னல் தற்போது “குறைந்த தகவல் மண்டலத்தில்” இருப்பதாக ஹாலண்ட் கூறினார். “தொழில்நுட்ப தடைகளை எதிர்கொள்ளும் சமிக்ஞை மிகவும் பலவீனமாக உள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.
ஏலியன் சிக்னல்
ஆக்ஸ்போர்டு தலைமையிலான லாப நோக்கமற்ற திட்டமான Breakthrough Listen திட்டம் வெளியிட்ட ஒரு ஆதாரத்தை மேற்கோள் காட்டிய அவர், ஒரு மேம்பட்ட அன்னிய இனத்திலிருந்து சமிக்ஞை உருவானது என்ற கோட்பாட்டை அந்த ஆதாரம் ஆதரிக்கிறது என்று உறுதியாக கூறுகிறார். நமது நட்சத்திர மண்டலத்தில் மனிதரல்லாத வேற்று கிரக நுண்ணறிவை நாசா கண்டுபிடித்துள்ளது, அது பற்றி மக்களுக்கு தெரியாது,” என்று அவர் மேலும் கூறினார்.
அக்டோபர் 2021 இல், ப்ராக்ஸிமா சென்டாரிக்கு (மேலே) அருகில் இருந்து வந்ததாகக் கூறப்படும் ரேடியோ சிக்னலைக் கண்டறிந்ததாக பிரேக்த்ரூ லிஸன் தெரிவித்தாலும், ஆனால் அது ‘தவறான நேர்மறை’ (false positive) எனக் கண்டறியப்பட்டது.