அரச நிறுவனங்களினால் ஒழுங்கு செய்யப்படும் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் பணிகளின் போது பிரதமரின்/ அமைச்சர்களின் புகைப்படங்கள் மற்றும் தகவல்களை பயன்படுத்துவது தொடர்பாக பிரதமர் அலுவலகம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்திரி கையொப்பமிட்டு அனுப்பி வைத்துள்ள அந்தக் கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் பார்வைக்கு இணங்க, பொது நிதியை உகந்த முறையில் பயன்படுத்துவதற்காகவே, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவ்வாறே, ஏற்பாடு செய்யப்படும் எந்த ஒரு நிகழ்வுகளின் நினைவுச் சின்னங்கள், நினைவுப் பரிசு, அது தொடர்பான விடயங்கள் உட்பட சகல அச்சு மற்றும் இலத்திரனியல் வெளியீடுகளுக்காக பிரதமர்/ அமைச்சர்களின் புகைப்படங்கள் மற்றும் தகவல்களை பயன்படுத்துவதாயின் அதற்காக பிரதமருக்காக பிரதமர் அலுவலகத்தினதும், அமைச்சர்களுக்காக சம்பந்தப்பட்ட அமைச்சுக்களினதும் உத்தியோகபூர்வ எழுத்து மூலமான அனுமதியைப் பெற வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.