Cinema Roundup: தள்ளிப்போன ஷங்கர் படம்!; ரேஸர் கீர்த்தி! – இந்த வார டாப் சினிமா தகவல்கள்!

இந்த வார டாப் சினிமா தகவல்களை இங்கே பார்க்கலாம்.

தள்ளிப்போகும் ஷங்கர் திரைப்படம்!

ஷங்கர் இயக்கத்தில் சமீபத்தில் `இந்தியன் 2′ திரைப்படம் வெளியாகியிருந்தது. இதை தவிர, ராம் சரணை வைத்து `கேம் சேஞ்சர்’ திரைப்படமும் இவர் கைவசம் இருக்கிறது. `இந்தியன் 3′ திரைப்படமும் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Game Changer Poster

`கேம் சேஞ்சர்’ திரைப்படம் முதலில் கிறிஸ்துமஸ் வெளியீடாக திரைக்கு வரும் என அறிவித்திருந்தார்கள். ஆனால், இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை ஜனவரி மாதத்திற்கு தள்ளி வைத்திருக்கிறார்கள். பொங்கல் வெளியீடாக இத்திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது. ராம் சரணுடன் எஸ்.ஜே.சூர்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ரேஸர் கீர்த்தி!

துபாயில் கார் ரேஸில் பங்குகொள்ளும் காணொளியை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்த காணொளியில் ரேஸர் குறித்தான விஷயங்களை கேட்டறிந்து ரேஸ்கேற்ப உடையணிந்து கார் ரேஸில் ஈடுபடுகிறார். “ அதிசயங்களுடனும், அனுபவங்களுடன் மொமோரிஸ்களை உருவாக்குகிறேன். ” எனவும் இந்த காணொளியோடு பதிவிட்டிருக்கிறார்.

Keerthy Suresh & Shanmuga Pandian movie

விஜய்காந்த் மகனின் மதுரை படம்!

விஜய்காந்த் மகனான சண்முகப்பாண்டியன், சரத்குமார் ஆகியோர் பொன்ராம் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் முன்பே வெளியாகியிருந்தது. பொன்ராம் இதற்கு முன்பு `வருதப்படாத வாலிபர் சங்கம்’, `ரஜினி முருகன்’, `சீமாராஜா’ போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது வெளியிட்டிருக்கிறார்கள். `கொம்பு சீவி’ என இப்படத்திற்கு பெயர் வைத்திருக்கிறார்கள். 1996-ல் உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, வைகை அணை பகுதிகளில் நடந்த கதை என சரத்குமார் இத்திரைப்படம் குறித்து பதிவிட்டிருக்கிறார்.

பிரதீப் ரங்கநாதனுடன் அனுபாமா!

`லவ் டுடே’ திரைப்படத்திற்குப் பிறகு நடிகராக பிரதீப் ரங்கநாதனுக்கு சினிமாவில் நல்ல பாதை அமைந்திருக்கிறது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் `டிராகன்’, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் `எல்.ஐ.கே’ போன்ற திரைப்படங்களை தற்போது லைன் அப்பில் வைத்திருக்கிறார். டிராகன் படத்தின் மூன்று போஸ்டர்களை வெளியிட்டிருக்கிறது படக்குழு. அதன் மூலம் இத்திரைப்படத்தில் அனுபாமா நடிக்கிறார் என்ற தகவலையும் அறிவித்திருக்கிறார்கள். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. `ஓ மை கடவுளே’ திரைப்படத்திற்குப் பிறகு இந்த படத்தை இயக்குகிறார் அஸ்வத் மாரிமுத்து.

NaniOdela2 & Dragon Poster

மீண்டும் இணைந்த `தசாரா’ கூட்டணி!

நானி நடிப்பில் கடந்தாண்டு `தசாரா’ திரைப்படம் வெளியாகி ஹிட்டடித்திருந்தது. `மைனரு வேட்டிக்கட்டி’ என்ற ஹிட் பாடல் இத்திரைப்படத்தை பட்டி தொட்டியெங்கும் கொண்டுச் சென்றது. இத்திரைப்படத்தை ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியிருந்தார். இக்கூட்டணி மீண்டும் இணையவிருக்கிறது என்ற தகவல் முன்பே பேசப்பட்டது. இந்த தகவலை தற்போது உறுதி செய்து படத்திற்கான பூஜையை நேற்று போட்டிருக்கிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.