Siragadikka Aasai: வெற்றி வசந்த் – வைஷ்ணவி திருமண நிச்சயதார்த்தம்; வாழ்த்திய பிரபலங்கள்

‘சிறகடிக்க ஆசை’ தொடரின் மூலம் சின்னத்திரைக்குள் அடியெடுத்து வைத்தவர் வெற்றி வசந்த்.

யூடியூபராக பரிச்சயமான வெற்றி வசந்த், சின்னத்திரையில் தான் நடித்த முதல் சீரியலிலேயே தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். ‘ராஜா ராணி’ தொடரின் மூலம் வெகுவாக கவனிக்கப்பட்டவர் வைஷ்ணவி. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘பொன்னி’ தொடரில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். வசந்த்துக்கும் வைஷ்ணவிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவிருக்கிறது என்பதை வசந்த்தும் வைஷ்ணவியும் அவர்களுடைய ரசிகர்களுக்கு ஏற்கெனவே அறிவித்திருந்தனர்.

வெற்றி வசந்த் – வைஷ்ணவி

இந்நிலையில் இன்று வசந்த் – வைஷ்ணவி திருமண நிச்சயதார்த்தம் இரு வீட்டு பெற்றோர்கள், பெரியோர்கள், நண்பர்கள், சின்னத்திரை பிரபலங்கள் எனப் பலர் முன்னிலையில் சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இவர்களுக்குப் பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

வாழ்த்துகள் வெற்றி வசந்த் – வைஷ்ணவி!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.