மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது, மொத்தம் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடராக விளையாடப்பட உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 இறுதி போட்டிக்கு தகுதி பெற இந்த தொடரில் இந்திய அணிக்கு வெற்றி அவசியம். எனவே இந்த தொடருக்கு முன்பு சில கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளது. வழக்கமாக இது போன்ற பெரிய தொடர் நடைபெறுவதற்கு முன்பு இந்திய அணியின் வீரர்கள் சில உள்ளூர் போட்டிகளில் விளையாடுவார்கள். இந்த முறை அதற்கு பதிலாக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்தியா A அணியுடன் விளையாட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நவம்பர் 22 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள நிலையில், நவம்பர் 15 முதல் 17 வரை பெர்த்தில் உள்ள மைதானத்தில் இந்த பயிற்சி ஆட்டம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியா A அணியை ருதுராஜ் தலைமை தாங்க உள்ளார் என்றும், ரோகித் சர்மாவிற்கு எதிராக களமிறங்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி இதுபோன்ற பயிற்சி ஆட்டங்களை விளையாடவில்லை. அந்த நாட்டில் உள்ள சில உள்ளூர் அணிகளுடன் பயிற்சி ஆட்டத்தில் இதற்கு முன்பு விளையாடியுள்ளனர். இந்தியா A அணியுடன் இந்திய அணி விளையாடுவது மிகவும் நல்லது என்றும், எந்தவித அழுத்தங்கள் இல்லாமல் யூகங்கள் அமைக்கவும், வீரர்களை மதிப்பீடு செய்வதற்கும் இந்த போட்டி உதவும் என்று பிசிசிஐ தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
India vs India A at Perth ahead of BGT series.
it’s Rohit v/s Ruturaj pic.twitter.com/1QzqiSxjRM
Trolls2) October 13, 2024
“இந்த பயிற்சி ஆட்டத்தை இந்தியா எப்படி பயன்படுத்த போகிறது என்பது பிசிசிஐ எடுக்கும் முடிவு. இதன் முடிவு இந்த தொடரை இந்தியா எப்படி அணுக உள்ளது என்பதை எடுத்துக்காட்டும். சில சீனியர்கள் கூட இந்திய A அணியில் விளையாடலாம். ஆஸ்திரேலியா போன்ற பெரிய அணியை அவர்கள் சொந்த மணி எதிர்கொள்வதற்கு நல்ல பயிற்சி தேவை” என்று இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் தெரிவிக்கின்றனர். 2018-19 மற்றும் 2020-21 ஆகிய பார்டர் கவாஸ்கர் தொடர்களில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் இந்த ஆண்டு நடைபெறும் பார்டர் கவாஸ்கர் தொடர் சற்று கடினமானதாக இருக்கும். ஆஸ்திரேலிய அணி இந்த முறை எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்று தயாராகி வருகிறது.
இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் முழு அட்டவணை
முதல் டெஸ்ட் – நவம்பர் 22-26, பெர்த் ஸ்டேடியம்
இரண்டாவது டெஸ்ட் – டிசம்பர் 6-10 ,அடிலெய்டு ஓவல்
மூன்றாவது டெஸ்ட் – டிசம்பர் 14-18, தி கபா, பிரிஸ்பேன்
நான்காவது டெஸ்ட் – டிசம்பர் 26-30, மெல்போர்ன்
ஐந்தாவது டெஸ்ட் – ஜனவரி 3-7 SCG, சிட்னி
மேலும் படிக்க | IND vs NZ: நன்றாக விளையாடியும் இந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை!