தம்புல்லா,
இலங்கை சென்றுள்ள வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி மூன்று டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இதில் இலங்கை-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி தம்புல்லாவில் நேற்று நடந்தது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரொவ்மென் பவேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் அசலங்கா 59 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 19.1 ஓவர்களில் 5 விக்கெட் மட்டும் இழந்து இலக்கை கடந்து வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் பிரண்டன் கிங் அதிரடியாக விளையாடி 63 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலையில் உள்ளது.