சீரற்ற காலநிலை காரணமாக கம்பஹா மாவட்டத்தில் இதுவரையிலும் 20இ553 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அணர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த குடுமபங்களுக்கு உணவு மற்றும் நிவாரைணைங்கள் உரிய பிரதேச செயலகத்தினூடாக கிராம உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கம்பஹா மாவட்ட அணர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால், கம்பஹா மாவட்டத்தில் நேற்று (13) பிற்பககல் 4 மணி வரை 20இ553 குடும்பங்களைச் சேரந்த 82,839 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கம்பஹா மாவட்ட அணர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, மீரிகம, பியகம, திவுலபிட்டிய, வத்தளை, மஹர, களனி, கட்டான, ஜாஎல மற்றும் கம்பஹா ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் 261 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரையிலும் முழுமையான இழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்பதுடன், பகுதியளவு இழப்புகள் 41 பதிவாகியுள்ளன. கம்பஹா மாவட்டத்தில் இடம்பெயர்ந்த குடும்பங்களின் எண்ணிக்கை 446 ஆகும். அந்தக் குடும்பங்களைச் சேர்ந்த 1,478 பேர் 18 முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் கம்பஹா மாவட்ட அணர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.