சென்னை: சிறகடிக்க ஆசை சீரியலின் ஹீரோவாக ரசிகர்களை கவர்ந்துவரும் வெற்றி வசந்த் -பொன்னி சீரியல் நாயகி வைஷ்ணவி இருவருக்கும் நேற்றைய தினம் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இவர்கள் இருவரும் காதலிப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தனர். விஜய் டிவியின் முன்னணி சீரியலான சிறகடிக்க ஆசை சீரியல் தொடர்ந்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறது.
