`கங்குவா’ ரிலீஸுக்கு தயாராகி கொண்டிருக்கிறது.
இன்னும் சரியாக ஒரே மாதமே ரிலீஸுக்கு நேரமிருக்கிறது. அதையொட்டி திட்டமிடல்களுடன் புரொமோஷன் பணிகளுக்கும் ஆயத்தமாகிறது படக்குழு. நேற்றைய தினம் எக்ஸ் வலைதளப் பக்கத்தின் ஸ்பேஸில் பங்குக் கொண்டு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா `கங்குவா’ குறித்து பல விஷயங்கள் பகிர்ந்திருக்கிறார்.
அவர், ” எங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த திரைப்படமான `வா வாத்தியார்’ படத்தை ஜனவரி மாதத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம். கங்குவா திரைப்படத்தின் புரொமோஷன் பணிகளுக்காக 30 நாட்கள் சூர்யா சார் டேட் கொடுத்திருக்கிறார். தினந்தோறும் ஏதேனும் ஒரு நிகழ்வு நடந்துக் கொண்டேதான் இருக்கும். கங்குவா திரைப்படம் 4 தென் இந்திய மொழியிலும் இந்தியில் தியேட்டரிலும் வெளியாகும். பிரஞ்சு, ஸ்பானிஷ், இங்கிலீஷ் ஆகிய மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது. சீன மொழியிலும், ஜாப்பனீஸ் மொழியிலும் ரிலீஸ் கொஞ்சம் தள்ளிப்போகும். அவர்கள் சொல்கிற தேதியில்தான் படம் திரையரங்குகளில் வரும்.
ஓடிடி பதிப்பு மொத்தம் 38 மொழிகளில் வெளியாகும். `கங்குவா 2′ திரைப்படத்தை திரையரங்குகளிலேயே இத்தனை மொழிகளில் கொண்டு வர முயற்சிக்கிறோம். டீசர் வெளியான சமயத்தில் இந்தி டப்பிங் குறித்து விமர்சனங்கள் எழுந்தன. அந்த சமயத்தில் சிவா சார் பிஸியாக இங்கு இருந்தார். தற்போது மும்பைக்கே சென்று பாபி தியோல் காட்சிகளுக்கான டப்பிங் பணிகளை முழுமையாக முடித்து திரும்பியிருக்கிறார். சூர்யா சார் தமிழ் மொழியில் மட்டும்தான் டப்பிங் செய்திருக்கிறார். ஆனால், இப்போது ஏ.ஐ வந்துவிட்டது. அதன் மூலம் பிற மொழிகளிலும் சூர்யா சாரின் குரலை கொண்டு வந்திருக்கிறோம்.” எனக் கூறியிருக்கிறார்.
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…