Suriya 45: சூர்யாவை இயக்கும் ஆர்.ஜே. பாலாஜி – விஜய்க்கு சொன்ன கதையா?

சூர்யாவின் 45வது திரைப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்குகிறார்.

`மூக்குத்தி அம்மன்’, `வீட்ல விஷேஷம்’ ஆகிய படங்கள் மூலம் இயக்குநரான ஆர்.ஜே. பாஜாலி சூர்யாவை வைத்து அடுத்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இத்திரைப்படம் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி, ” இத்திரைப்படம் பிளாக்பஸ்டர் என்டர்டெயினராக இருக்கும்!” எனப் பதிவிட்டிருக்கிறார்.

ஏற்கெனவே ஆர்.ஜே. பாலாஜி பேட்டிகளில் நடிகர் விஜய்க்கு கதை சொல்லியிருப்பதாக கூறியிருந்தார். அக்கதைக்கு திரைக்கதை எழுதுவதற்கு அதிக காலம் தேவைப்படும் என்பதால் அத்திரைப்படம் அப்போது டேக் ஆஃப் ஆகாமல் தாமதமானது. தற்போது விஜய்யும் அவருடைய 69-வது படம்தான் அவரின் சினிமா கரியரின் கடைசி திரைப்படம் என்றும் அறிவித்துவிட்டார். `விஜய்க்கு சொன்ன அதே கதையைதான் ஆர்.ஜே. பாலாஜி தற்போது சூர்யாவுக்கும் சொல்லி ஓகே டிக் வாங்கியிருக்கிறார். அந்த கதைதான் படமாகிறது!’ என்ற தகவலும் பேசப்பட்டு வருகிறது. மேலும், ஆர்.ஜே. பாலாஜி `சொர்க்க வாசல்’ என்ற திரைப்படத்திலும் தற்போது நடித்து வருகிறார்.

Suriya 45

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் `கங்குவா’ திரைப்படம் அடுத்த மாதம் 14-ம் தேதி வெளியாகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 44-வது திரைப்படத்தின் படப்பிடிப்பும் கடந்த வாரம் நிறைவு பெற்றது. அதை தொடர்ந்து வெற்றி மாறன் இயக்கத்தில் `வாடிவாசல்’ திரைப்படமும் அவருடைய லைன் அப்பில் இருக்கிறது. மேலும், பாலிவுட் பக்கமும் சூர்யா களமிறங்கவுள்ளார் என்ற விஷயமும் மற்றொரு பக்கம் பேசப்பட்டு வருகிறது.

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.