2024 பாராளுமன்றத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்காளர் இடாப்புக்கள் 2024.10.16 ஆம் திகதி அத்தாட்சிப்படுத்தப்படுவதுடன் அஞ்சல் வாக்குச் சீட்டுக்களின் விநியோகமும் அஞ்சலுக்கு ஒப்படைத்தலும் 2024.10.23 ஆம் திகதி மேற்கொள்ளப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, மாவட்ட செயலக வளாகத்திலுள்ள அனைத்து அலுவலகங்கள், தேர்தல்கள் அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் ஆகிய நிறுவனங்களின் அஞ்சல் வாக்காளர்களின் அஞ்சல் வாக்குகள், 2024.10.30 மற்றும் 2024.11.04 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்படவுள்ளது.
அரச நிறுவனங்களிலும் மற்றும் படைமுகாம்களிலும் அஞ்சல் வாக்காளர்களின் அஞ்சல் வாக்கு அடையாளமிடல் 2024.11.01 மற்றும் 04 ஆகிய திகதிகளில் அடையாளமிடப்படும். இத்தினங்களில் அஞ்சல் வாக்கு அடையாளமிட முடியாமல்போகின்ற அஞ்சல் வாக்காளர்களுக்கு 2024.11.07 மற்றும் 08 ஆகிய தினங்களில் தாம் பணிபுரிகின்ற இடம் அமைந்துள்ள மாவட்டத்தின் மாவட்ட தேர்தல்கள் அலுவலகங்களில் அஞ்சல் வாக்கு அடையாளமிடுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு: