இலங்கை கடற்படையின் புதிய பிரதித் தலைமை அதிகாரியாக பணிப்பாளர் நாயகம் செயற்பாடுகள், ரியர் அட்மிரல் நிஷாந்த பீரிஸ் 2024 ஒக்டோபர் 11 ஆம் திகதி நியமிக்கப்பட்டதுடன், அதற்கான நியமனக் கடிதம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவினால் (2024 ஒக்டோபர் 14) வழங்கப்பட்டது. மேலும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள துணைத் தலைமை அதிகாரிக்கு தனது வாழ்த்துகளையும் கடற்படை தளபதி தெரிவித்துள்ளார்.
கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரியின் சிறந்த பழைய மாணவரான ரியர் அட்மிரல் நிஷாந்த பீரிஸ், ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 08 வது உள்வாங்கலைச் சேர்ந்த கெடட் அதிகாரியாக 1990 ஆம் ஆண்டில் இலங்கை கடற்படையின் நிறைவேற்று கிளையில் இணைந்தார். திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் பீடத்தில் அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர், அவர் 1992 இல் சப்-லெப்டினன்டாக நியமிக்கப்பட்டார். அவர் 1995 இல் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் பீடத்தில் சப்-லெப்டினன்ட் தொழில்நுட்ப பாடநெறியை வெற்றிகரமாக முடித்து 2021 ஆம் ஆண்டில் ஆயுதங்கள் பற்றிய நீன்ட பாடநெரி இந்திய கடற்படை கப்பல் தோனசர்யா பயிற்சி பாடசாலையில் மேற்கொண்டுள்ளார். சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியில் 2010 ஆம் ஆண்டில் பணியாளர் பாடநெறியை பூர்த்தி செய்த ரியர் அட்மிரல் நிஷாந்த பீரிஸ், பங்களாதேஷ் தேசிய பாதுகாப்பு அகாடமியில் 2020 ஆம் ஆண்டில் தேசிய பாதுகாப்பு பாடநெறியை பூர்த்தி செய்துள்ளார். மேலும், அவர் களனிப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புப் படிப்பில் முதுகலைப் பட்டமும், பங்களாதேஷின் டாக்காவில் உள்ள தொழில் வல்லுநர்களுக்கான பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டில் சமூக அறிவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். அவரது கடற்படை வாழ்க்கையில் சீராக முன்னேறிய இந்த சிரேஷ்ட அதிகாரி 2022 நவம்பர் 13, ஆம் திகதி ரியர் அட்மிரல் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.
தனது சேவையின் போது இலங்கை கடற்படையில் பல்வேறு பதவிகளை வகித்த ரியர் அட்மிரல் நிஷாந்த பீரிஸ், விரைவுத் தாக்குதல் ரோந்து படகுகளின் கட்டளை அதிகாரியாகவும், இலங்கை கடற்படை கப்பல்கள் மற்றும் நிறுவனங்களின் கட்டளை அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். மேலும், சிரேஷ்ட பணியாளர் அதிகாரி (ஆட்சேர்ப்பு), துணைப் பயிற்சி நிர்வாகி மற்றும் இளைய கடற்படைப் பணியாளர் பாடநெறி ஒருங்கிணைப்பாளர், பாதுகாப்புச் சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி பயிற்சிக் குழுத் தலைவர், இயக்குநர் கடற்படை செயல்பாடுகள், இயக்குநர் கடற்படை சிறப்புப் படைகள், இயக்குநர் கடற்படை வெளிநாட்டு உறவுகள், இயக்குநர் கடற்படை கடல்சார் மேற்பார்வை, தென் கடற்படை கட்டளையின் துனை தளபதி மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளையின் தளபதி போன்ற முக்கிய பதவிகளை வகித்த ஒரு புகழ்பெற்ற சிரேஷ்ட அதிகாரி ஆவார்.
மேலும், ரியர் அட்மிரல் நிஷாந்த பீரிஸ் தொடர்ந்தும் செயல்பாடுகள் பணிப்பாளர் நாயகமாக செயற்படும் அதேவேளை கடற்படையின் பிரதித் தலைமை அதிகாரியாகவும் பணியாற்றுவார்.