சென்னையில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வரும் நிலையில் மண்சரிவு ஏற்பட்டு அடுக்குமாடி குடியிருப்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அமைந்தகரையில் உள்ள நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள நெல்சன் சாம்பெர்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் ஒரு பகுதியில் இந்த விரிசல் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்கள் இதன் அருகில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிக்காக தோண்டப்பட்டு வரும் பள்ளத்தால் ஏற்பட்ட மண்சரிவால் இந்த விரிசல் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். கூவம் ஆற்றின் கரையில் […]