சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில்,வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதன் காரணமாக சென்னை உள்பட தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது. குறிப்பாக சென்னையில் இன்றும் நாளையும் மிக அதி அளவில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.