விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரக்ஷன். விஜேவாக தொடங்கிய ரக்ஷன் 2020-ம் ஆண்டில், துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்து, இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் வெளியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படம் மூலம் விஜே ரக்ஷன் நடிகராக அறிமுகமானார். இந்தப் படத்தில் துல்கர் சல்மானின் நண்பராக நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து சில வெப்சீரிஸ், படங்கள் என நடித்து வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில், இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில், ரஜினிகாந்தின் 170-வது படமான வேட்டையன் படம் வெளியானது. இந்தப் படம் விமர்சன ரீதியிலும், வசூல ரீதியிலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
இந்த படத்தில் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், கிஷோர், ரோகினி, ராவ் ரமேஷ் உள்பட பல பிரலங்கள் நடித்துள்ளனர். இதில், வி.ஜே ரக்ஷன் முக்கிய கதாப்பத்திரத்தில் நடித்திருந்தார். வேட்டையன் படத்தில் தான் நடித்தது குறித்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்த ரக்ஷன், “ரசிகனாக இருந்த ரக்ஷன் இப்போது குடும்பப் பையனாகிறான். தலைவர் ரஜினிகாந்த், மஞ்சுவாரியர், ஞானவேல் ஆகியோர் மிகவும் ஊக்கப்படுத்துபவர்காளாக உணர்கிறேன். உங்களின் அன்புக்கும், ஆதரவுக்கு நன்றி” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…