`ராயன்’ திரைப்படத்தின் `வாட்டர் பாக்கெட்’ பாடல் 100 மில்லயன் பார்வைகளைத் தாண்டியிருக்கிறது.
தனுஷ் திரைப்படத்தின் பல பாடல்கள் இதுபோன்ற ஹிட் மீட்டரை ஏற்கெனவே பல முறை எட்டியிருக்கிறது. அந்த லிஸ்டில் தற்போது `வாட்டர் பாக்கெட்’ பாடலும் இணைந்திருக்கிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான இந்த பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும், பின்னணி பாடகி ஸ்வேதா மோகனும் இணைந்து பாடியிருந்தார்கள்.
இந்த பாடல் தொடர்பாக நகைச்சுவையாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டிருக்கிறார் சந்தோஷ் நாராயணன். அதில் அவர், “என் குழந்தை பருவ நண்பன் ஒருவர் என்னிடம் `ஹலோ யார் பேசுறீங்க’ எனக் கேட்கும்போது நான் `ஏ.ஆர். ரஹ்மானுடைய சிங்கர்’ என வெட்கமே இல்லாமல் பதிலளிப்பேன்.
Me to my childhood friend on a call shamelessly …
Him : Hello yaar pesureenga ?
Me : AR Rahman singer .Jokes apart, Thanks @arrahman sir and darling @dhanushkraja for accepting my as usual padu-mokka singing capability and making it into such a magical piece… https://t.co/aAw05WXQ4c
— Santhosh Narayanan (@Music_Santhosh) October 14, 2024
இப்படியான நகைச்சுவைகளைத் தாண்டி மொக்கையாக பாடும் என் தன்மையை ஏற்றுக் கொண்டு இந்த பாடலை மேஜிக்கல் பீஸாக மாற்றிய ரஹ்மான் சாருக்கும், டார்லிங் தனுஷிற்கும் நன்றி. ” என பதிவிட்டிருக்கிறார்.
ஏ.அர். ரஹ்மான் இசையில் சந்தோஷ் நாராயணன் பாடிய முதல் பாடலும் இதுதான்.
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…