அனர்த்த நிவாரண முகாம்களுக்கு மேற்கு பாதுகாப்பு படை உதவி

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜி. அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள், வெல்லம்பிட்டிய வித்யாவர்தன வித்தியாலயம், சேதவத்தை சித்தார்த்த வித்தியாலயம் மற்றும் கொடுவில காமினி வித்தியாலயம் ஆகிய இடங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள அனர்த்த நிவாரண முகாம்களை 14 ஒக்டோபர் 2024 அன்று பார்வையிட்டார்.

அவர் தனது விஜயத்தின் போது, இந்த முகாம்களில் வசிக்கும் 130 குடும்பங்களைச் சேர்ந்த 581 நபர்களின் வாழ்க்கை நிலைமைகளை ஆராய்ந்தார்.

மேலும், வெள்ள நிலைமையை நிர்வகிப்பதில் முக்கிய பங்காற்றுகின்ற கொலன்னாவை, களுபாலம் நீர் இறைக்கும் நிலையத்தையும் அவர் பார்வையிட்டார்.

14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், கொலன்னாவை பிரதேச செயலாளர் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் இந்த ஆய்வு விஜயத்தில் கலந்துகொண்டனர்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.