டெல்லியிலிருந்து இன்று சிகாகோ சென்ற ஏர் இந்தியா விமானம் AI 127ல் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த மிரட்டலை அடுத்து அந்த விமானம் கனடாவில் உள்ள இகிலுய்ட் (Iqaluit) விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது. ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமான நிறுவன விமானங்களுக்கு கடந்த சில நாட்களாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் நிலையில் சிகாகோ விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக வந்த மிரட்டல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மிரட்டலை அடுத்து பயணிகள் மற்றும் விமான பணியாளர்களின் பாதுகாப்புக் […]