மீன்பிடித் துறையில் ஈடுபடுபவர்களுக்கு அக்டோபர் முதலாம் திகதி முதல் விசேட மானிய விலையில் எரிபொருள்..

மீன்பிடி கைத்தொழிலை முன்னேற்றுவதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள சேலைத்திட்டத்தின் ஒரே ஒரு பிரதான செயற்பாடாக, மீன்பிடித் துறையில் ஈடுபடுபவர்களுக்காக விசேட மானிய விலையில் எரிபொருளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் மேலதிக செயலாளர் தம்பிக ரணதுங்க தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (15) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இந்தத் தீர்மானத்தை வெளியிட்டார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்…

சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக கடந்த காலங்களில் மீன்பிடித் துறை பாரிய சிக்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதற்கு மாற்று நடவடிக்கையாகவே அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

மேலும் 6500 மீன்பிடி படகுகள் டீசலைப் பயன்படுத்;தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. 32,500 படகுகள் மண்ணெண்ணெய் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. இந்த படகுகள் சாதாரண முறையில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாமையினால் மீன்பிடித் தொழில் பாரியளவு பாதிப்படைந்துள்ளது. அதனால் சந்தையில் மீன்களின் விலை கனிசமான அளவு அதிகரித்துள்ளது. அதன்படி மீன்பிடி படகு உரிமையாளர்கள் இரு வகையினருக்கும் இந்த மானியத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலையேற்றம் காரணமாக மீனவர்களின் மூலதனச் செலவு பெருமளவு அதிகரித்துள்ளது. எனினும் அதற்கு ஈடாக பிடிக்கப்பட்ட மீன்கள் அதிகரிக்காமையினால் மீனவர்கள் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர். சில மீனவர்கள் மீன்பிடித்தலை விட்டு வெளியேற நேரிட்டதாகவும் கடற்றொழில் மற்றும் நீரியல்வளத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தொழில்துறை பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டில் மீன் உற்பத்தி சுமார் 415,000 மெட்ரிக் டொன் காணப்பட்டது. 2023 ஆம் ஆண்டில், இது சுமார் 293,000 ஆக இருந்தது. நெருக்கடியான 2020, 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் மீன் உற்பத்தி வெகுவாகக் குறைந்துள்ளது.

இது மறைமுகமாக மக்களின் ஊட்டச்சத்தை பாதித்து ஒட்டுமொத்த மக்களையும் பாதிக்கிறது. எனவே, இத்துறையை விரைவில் மீட்டெடுக்க வேண்டும் என்றும், அதன்படி இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.