சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அமரன்’.
இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, ‘இந்து ரெபேக்கா வர்கீஸ்’ என்ற உண்மை கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்திருக்கிறார். கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரித்திருக்கிறது. தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ அதிகாரி முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் சமீபத்தில் நடைபெற்ற படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் காஷ்மீரில் நடந்த படப்பிடிப்பு குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் பேசியவை இணையத்தில் வைரலாகி வருகிறது. “சாய் பல்லவிக்கு இங்கிலீஷ் நல்லா தெரியும். எனக்கு சுத்தமா இங்கிலீஷ் தெரியாது. நான் எனக்கு தெரிஞ்ச நாலு இந்தி வார்த்தியில மட்டும்தான் பேசி அங்க இருக்க மக்கள் கிட்ட சமாளிச்சுட்டு இருந்தேன்.
காஷ்மீர்னு சொன்னதும் எனக்கு ‘புது வெள்ளை மழை பொழிகின்றதே’ பாட்டுதான் ஞாபகத்துக்கு வந்துச்சு. ஆனா அப்படிலாம் அங்க இல்ல. மலை மேல மட்டும் பனி இருந்தது. வேற எங்கையும் பனி இல்ல. ஜூன், ஜூலை அவ்வளவா அங்க பனி இல்ல. ஆனா ரொம்ப அழகான ஊர். முதல் தடவையா இப்பதான் காஷ்மீருக்கு போயிருக்கேன்.
அங்க ஷூட் பண்றதே கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான். எல்லாரும் சேர்ந்து இந்த படத்தை சிறப்பாக பண்ணிருக்கோம். இந்த படம் எனக்கு நிறையக் கற்றுக்கொடுத்திருக்கு. படத்தைத் தாண்டி வாழ்க்கை முழுவதும் எப்படி செயல்படணும்னு கற்றுக்கொடுத்திருக்கு. துப்பாக்கியை எப்படி கையாளணும்கிறது உட்பட” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.