Jayakumar: "ஆளுநரும் திமுக அரசும் ஒன்னு சேர்ந்துட்டாங்க"- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

“சென்னையில் அதிகனமழைக்கான எச்சரிக்கை கொடுத்தும் மிக குறைவான அளவிலேயே மழை பெய்ததால் அரசு தப்பித்தது. இல்லை என்றால் திமுகவின் சாயம் வெளுத்திருக்கும்” என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்திருக்கிறார்.

செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய அவர், ” வடகிழக்குப் பருவமழை கடுமையான தாக்கத்தை தமிழ்நாடு முழுவதும் ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்த அரசு ஏற்படுத்தித் தரவில்லை. மழை நீர் வடிகால் பணிகள் குறித்து அமைச்சர்களே மாறி மாறி பேசி வருகிறார்கள். மழை காலத்தில் யாராவது மழை நீர் வடிகால்வாய் பணிகளை மேற்கொள்வார்களா எனக் கேள்வி எழுப்பினார். ரிப்பன் மாளிகையில் துணை முதல்வர் ஆய்வு மேற்கொண்ட போது திமுக ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளாக என்ன செய்தீர்கள் என்று செய்தியாளர்கள் அவரிடம் கேட்டதற்கு, மழை வந்துவிட்டது என்று ஒரு கத்துக்குட்டி போல பதில் அளிக்கிறார். பேரிடர் காலங்களை எதிர் கொள்வதற்கான எந்தத் திட்டங்களையும் இந்த அரசு மேற்கொள்ளவில்லை என்றும் இந்த அரசு செய்த திட்டங்கள் என்னென்ன என்றும் கேள்வி எழுப்பினார். வேளச்சேரி பாலத்தில் மக்கள் பயந்து வாகனத்தை நிறுத்தி உள்ளனர்.

கார் பார்க்கிங்

இது இந்த ஆட்சி மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறது என தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் கேட்கும் கேள்விக்குப் பொறுப்பாக பதில் அளி்க்காமல் விளையாட்டு பிள்ளை போல துணை முதல்வர் பதில் அளிக்கிறார். அவர் தெளிவாக இருக்கிறா அல்லது தெளிவில்லாமல் இருக்கிறா எனத் தெரியவில்லை. இந்த அரசைப் பொறுத்தவரை வேலை பார்ப்பது போல காட்டிக்கொள்கிறார்கள். ஆனால் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி பகுதியில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி உள்ளது. முதலமைச்சர் தொகுதியில் இடுப்பளவு தண்ணீரில் இருந்தது. வடகிழக்கு பருவமழை கடுமையான தாக்கத்தை தமிழ்நாடு முழுவதும் ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு ஏற்படுத்தி தரவில்லை. வானிலை ஆய்வாளர்கள் கடுமையாக மழை இருக்கும் என கூறிய போதும் கூட முன்னேற்பாடுகளை செய்யவில்லை.

சென்னை, பாண்டிச்சேரி இடையே உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், வலுப்பெற்று புயலாக மாறும் என கூறப்பட்ட நிலையில் புயலாக அது மாறவில்லை. அதனால் மழை குறைந்துவிட்டது. இன்றைக்கு ரெட் அலர்ட் கொடுத்தார்கள் ஆனால் மழை இல்லை. இன்று மட்டும் மழை பெய்திருந்தால் திமுகவின் சாயம் வெளுத்து இருக்கும்” எனவும் விமர்சித்தார். மேலும் பேசிய அவர், “தற்போது பெய்த மழைநீர் போவதற்கு இடமில்லாமல் கழிவு நீரோடு கலந்து செல்கிறது. அம்மா உணவகங்களை மதியம் 12 மணிக்கே மூடி விடுகிறார்கள். அம்மா உணவகத்தில் தயாரிக்கப்பட்ட உணவை மாநகராட்சி கவுன்சிலர் புஷ்பா என்பவர் காரில் எடுத்து சென்று அவர் செலவில் மக்களுக்கு சாப்பாடு போடுவது போன்று விநியோகம் செய்கிறார்.

ஜெயக்குமார்

அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்குவது எல்லாம் கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஆட்சி காலத்திலேயே கொண்டுவரப்பட்டது. மழை முடிந்த பிறகு இலவசமாக உணவு கொடுப்பதாக இவர்கள் கூறுகின்றனர். முதலமைச்சர் தொகுதியான கொளத்தூர் தொகுதியிலேயே மக்கள் கஷ்டப்படுகிறார்கள். மாநகராட்சி பணிகளுக்காக 14 ஆயிரம் கோடியை ஐந்து ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி காலத்தில் செலவு செய்துள்ளோம். அப்போது என்னென்ன துறைகளுக்கு எவ்வளவு செலவு செய்துள்ளோம் என எங்களிடம் கணக்கு உள்ளது. ஆனால் திமுகவால் அப்படி வெளிப்படையாக சொல்ல முடியுமா? முதல்வர் தான் ஒரு நாட்டிற்கு குடும்ப தலைவர்.

அவர் தான் அனைத்திற்கும் பொறுப்பு. அவர் பொறுப்பாகவும், புத்திசாலித்தனமாகவும் இருக்க வேண்டும்.அப்போது தான் அதிகாரிகள் மதிப்பார்கள்.எங்கள் ஆட்சி காலத்தில் காவல்துறை ஸ்காட்லாந்து போலீஸ் போல் இருந்தார்கள்.ஆனால் இன்று எப்படி என்று உங்களுக்கே தெரியும். தவறு செய்தால் அமைச்சர் நம்மை மாற்றி விடுவார் என அதிகாரிகள் எங்கள் ஆட்சி காலத்தில் பணியாற்றினார்கள். மேலும் தற்போதை மாநகராட்சி ஆணையர் குப்பை வரி வாங்க தான் ஆர்வம் காட்டுவார் எனவும் அமைச்சர் சேகர் பாபு விடம் மட்டும் பேசுவார் என்றும் தெரிவித்தார்.

ஸ்டாலின், ஆளுநர்

இந்த மழை காலத்தில் அரசின் செயல்பாடுகளை ஆளுநர் பாராட்டியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ” ஆளுநரும் திமுக அரசும் ஒன்றாகி விட்டனர். நேற்று வரை ஆளுநர் ஒழிக ஒழிக என கூறிவிட்டு இன்று ஆளுநர் வாழ்க என கூறிவருகின்றனர். முதல்வர் பிரதமரை பார்த்துவிட்டு வந்த பிறகு,அவர் அனுசரித்துப் போகுமாறு கூறியதை கேட்டு ஆளுநருடன் இந்த அரசு அனுசரித்து செல்கிறது. அமைச்சர் பொன்முடியை யாரை கேட்டு மாற்றினார்கள். தற்போதை உயர்கல்வித்துறை அமைச்சர், ஆளுநர் உடன் மோதல் போக்கு இல்லாமல் செல்ல இருக்கிறோம்” என்று கூறுகிறார் இதையெல்லாம் பார்த்தால், பிரதமரோடு திமுக எழுதப்படாத ஒரு ஒப்பந்தத்தை போட்டுள்ளது தெரிவதாக கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.