கர்ப்பமாகணும்னா இந்தக் காலங்களில் உறவு வெச்சுக்கோங்க… | காமத்துக்கு மரியாதை – 209

குளிர் காலங்களில் கருத்தரிப்பின் சதவிகிதம் அதிகமாக இருக்கும் என்கிற பாலியல் மருத்துவர் காமராஜ், அதற்கான அறிவியல் காரணங்களை விவரிக்கிறார்.

’’குளிர் காலங்களில் விந்துப்பைகள் குளிர்ச்சியாக இருப்பதால் விந்தணுக்களின் உற்பத்தி அதிகமாக இருக்கும். அதனால், கருத்தரிக்கிற வாய்ப்பு அதிகம். அதனால்தான், டெஸ்ட் டியூப் பேபிக்கான செய்முறையைக்கூட  மருத்துவர்கள் குளிர் காலங்களில் அதிகம் செய்வார்கள். 

டெஸ்ட் டியூப் பேபி

டெஸ்ட் டியூப் பேபிக்கான உபகரணமான இன்குபேட்டர் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டவை. அதனுள், 37 டிகிரி வெப்பத்தை மெயின்டெய்ன் செய்யும் ஹீட்டர் இருக்கும். சென்னையில், வெயில் காலங்களில் டெஸ்ட் டியூப் பேபிக்கான செய்முறை செய்யும்போது, சுற்றுப்புறத்தின் வெப்பநிலை 40 டிகிரி ஆக  இருந்தால், இன்குபேட்டர் வெப்பநிலையும் 40 ஆகிவிடும். அந்த உபகரணங்களில் குளிர்ச்சிப்படுத்தும் மெக்கானிசம் கிடையாது. ஏனென்றால், அமெரிக்காவில் பெரும்பாலும் குளிர்காலமே நிலவும். பொதுவாக இன்குபேட்டர் வெப்பத்தை மட்டுமே உற்பத்தி செய்யும். அதை இன்னும் வெப்பமாக்க வேண்டுமானால் செய்யலாம். ஆனால், சுற்றுப்புறம் வெப்பமாக இருந்தால் அதை கூல் செய்ய முடியாது. 

இதே மெக்கானிசம் தான் விந்துப்பைகளுக்கும். அது உடம்பிலிருந்து தள்ளி இருப்பதால் அந்த உறுப்பு உடல் வெப்பநிலையைவிட குறைவாகவே இருக்கும். அப்போதுதான் அதனால், போதுமான விந்தணுக்களை உற்பத்தி செய்ய முடியும். ஆனால், வெளிப்புறச்சூழல் மிகுந்த வெப்பமாக இருந்தால் விந்தணுக்களின் உற்பத்தி பாதிக்கப்படவே செய்யும்.

காமராஜ்

வெயில் நேரங்களில் உடலானது வியர்த்து தன்னை குளிர வைக்கும்.  இமயமலை போல குளிர் பிரதேசங்களில் மலை ஏறும்போது  மூச்சு வாங்க வைத்து நம்மை சமாளிக்க வைக்கும். ஆனால், விந்தணுக்களும் கருமுட்டையும் ஒற்றை செல்கள். இவற்றுக்கு இதுபோல வெளிப்புறச்சூழலுக்கு ஏற்றபடி வெப்பத்தை சமாளித்துக் கொள்கிற மெக்கானிசம் கிடையாது. இந்தப் பிரச்னை குளிர் காலங்களில் கிடையாது. அதனால்தான், குளிர் காலங்களில் கருத்தரிப்பு அதிகமாக இருக்கும். தவிர, குளிர்காலங்களில் இயல்பாகவே தாம்பத்திய உறவு அதிகமாக இருக்கும்’’ என்கிறார் டாக்டர் காமராஜ். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.