IPL Auction Jackpot News Tamil : ஐபிஎல் 2025 தொடருக்கான ஏலம் அடுத்த மாதம் நடக்க இருக்கும் நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் கடந்த ஐபிஎல் போட்டியில் கலக்கிய ஒரு இளம் பிளேயருக்கு மெகா ஜாக்பாட் அடிக்கப்போகிறது. ஏனென்றால் அந்த பிளேயரை டெல்லி அணி வியப்பளிக்கும் விதமாக தக்க வைக்கவில்லை. ரிஷப் பன்ட் 18 கோடி ரூபாய், அக்சர் படேல் 14 கோடி ரூபாய், குல்தீப் யாதவ் 11 கோடி ரூபாய் கொடுத்து தக்க வைக்க அந்த அணி திட்டமிட்டுள்ளது. எஞ்சிய ஒரு இடத்தில் யாரையும் டிசி அணி தக்க வைக்கவில்லை. அதேபோல் ஆச்சிரியப்படும் விதத்தில் டெல்லி அணி ஜேக் பிரேசர் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோரை தக்கவைக்கவில்லை என தெரிகிறது. கடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி அணிக்கு அதிரடி தொடக்கத்தை கொடுத்தவர் ஜேக் பிரேசர் மெக்குர்க். இளம் பிளேயரான இவரை அந்த அணி தக்க வைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 3 இந்திய பிளேயர்களை மட்டும் தக்க வைத்துவிட்டு ஜேக் பிரேசரை டிசி அணி தக்கவைக்காதது வியப்பளிக்கும் வகையில் உள்ளது.
ஜேக் பிரேசர் மெக்குர் ஜாக்பாட் ரெடி
இதனால் வரும் ஐபிஎல் போட்டியில் ஜேக் பிரேசர் மெக்குர்க் மெகா ஜாக்பாட் அடிக்கப்போகிறார். அவரை ஏலத்தில் எடுக்க பல ஐபிஎல் அணிகள் போட்டி போடப்போகிறது. ஆஸ்திரேலியாவின் இளம் வீரரான இவரின் திறமையை அடையாளம் கண்டு டெல்லி அணியில் விளையாட வாய்ப்பு கொடுத்தார் ரிக்கி பாண்டிங்.
அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு டெல்லி அணிக்கு சிறப்பான அதிரடி தொடக்கத்தை கொடுத்தார். எந்த பவுலராக இருந்தாலும் அசால்டாக சிக்சர் அடித்தார் ஜேக் பிரேசர் மெக்குர்க். அவரை டெல்லி அணி தக்க வைக்காதது வியப்பளித்தாலும், நிச்சயம் ஏலத்தில் அவருக்கு மெகா ஜாக்பாட் காத்திருக்கிறது என்று உறுதியாக சொல்லலாம்.
பஞ்சாப் கிங்ஸ் அணி ரெடி
ஜேக் பிரேசர் மெக்குர்கை ஏலத்தில் எடுக்கப்போவது கிட்டதட்ட பஞ்சாப் கிங்ஸ் அணி தான். ஏனென்றால் டெல்லி அணியின் பயிற்சியாளராக இருந்த ரிக்கி பாண்டிங், இந்த முறை பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராகியுள்ளார். அதனால், ஜேக் பிரேசர் மெக்குர்கை பஞ்சாப் அணிக்கு கொண்டு வருவது தான் ரிக்கி பாண்டிங் பிளான். இதேபோல் டெல்லி அணியில் ஆடிய மற்றொரு பிளேயரான டிரிஸ்டன் ஸ்டப்ஸூம் ஏலத்தில் வர இருக்கிறார். அவரையும் பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுக்கும் என தெரிகிறது. இருப்பினும் அவர்கள் இருவரையும் குறைந்த தொகைக்கு ஏலத்தில் எடுக்க டெல்லி அணி விடவே விடாது. பிரேசர் மெக்குர்க் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஏலத்திற்கு வரும்போது டெல்லி அணி நிச்சயம் ஏலத்தில் குதித்து அவர்களுக்கான ஏலத்தொகையை அதிகரிக்க வைக்கும்.
ஐபிஎல் 2025 ஏலம் எப்போது?
இந்த ஆண்டு ஐபிஎல் 2025 ஏலம் நவம்பர் 30 ஆம் தேதி துபாயில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகளை செய்து கொண்டு வரும் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகம் விரைவில் ஐபிஎல் ஏலத்துக்கான தேதியை அறிவிக்க இருக்கிறது. இம்முறை இன்னும் பிரம்மாண்டமாக ஐபிஎல் ஏலம் நடக்க இருக்கிறது. ஜியோ சினிமா மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனங்கள் இந்த ஏலத்தை நேரலையாக ஒளிபரப்பும்.