தயாரிப்பாளராகும் அன்புமணி ராமதாஸ் மகள் சங்கமித்ரா செளமியா அன்புமணி!
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸின் மகளான சங்கமித்ரா செளமியா அன்புமணி தயாரிப்பாளராக தற்போது களமிறங்கியிருக்கிறார்.
`உறுமீன்’, `பயணிகள் கவனிக்கவும்’ போன்ற திரைப்படங்களின் இயக்குநரான எஸ்.பி. சக்திவேல் இயக்கத்தில் உருவாகி ரிலீஸுக்கு தயாராகி வரும் திரைப்படம் `அலங்கு’. இத்திரைப்படத்தில் மலையாள நடிகர் செம்பன் வினோத் ஜோஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். `கோலி சோடா 2′ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் களமிறங்கிய செம்பன் வினோத் ஜோஸ் `விக்ரம்’ திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் கோலிவுட்டுக்கு விசிட் அடித்திருக்கிறார். இவர் மாலிவுட்டில் நடிகர் மட்டுமல்ல. அவர் ஒரு திரைக்கதையாசிரியரும்கூட . நமக்கு பரிச்சயமான `அங்கமளி டைரீஸ்’ திரைப்படத்தின் கதையாசிரியரும் இவர்தான்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தருமபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸின் மனைவியான செளமியா அன்புமணி போட்டியிட்டு தோல்வியை சந்தித்திருந்தார். தேர்தல் நேரத்தில் தனது தாயாராக்கு ஆதரவாக மகள் சங்கமித்ரா பிரச்சாரங்களை மேற்கொண்டது பலருக்கும் நினைவிருக்கலாம். அன்புமணி ராமதாஸுக்கு சங்கமித்ரா, சம்யுக்தா, சஞ்சுத்ரா என மூன்று மகள்கள் இருக்கிறார்கள். இவர்களில் சங்கமித்ரா திரைப்பட தயாரிப்பாளராக களமிறங்கியிருக்கிறார்.
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…