முச்சக்கர வண்டி கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.
அதன்படி ஒக்டோபர் 3ஆம் திகதி முச்சக்கர வண்டி கட்டண மீளாய்வுக் குழுவுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர், கட்டண திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானித்திற்கேற்ப ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கட்டணங்களை திருத்துமாறு அதிகார சபை தமது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
புதிய கட்டணங்களின் படி, முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் ரூ. 100 ஆகவும், இரண்டாவது கிலோ மீட்டரில் இருந்து தொடரும் தூரத்திற்கு ஏற்ப ஒரு கிலோ மீற்றருக்கான கட்டணம் ரூ. 85 ஆகவும் திருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.