டெல்லி மத்திய அரசு விரைவில் தக்காளி விலை குறையும் என தெரிவித்துள்ளது.. கடந்த சில மாதங்களாக அத்தியாவசிய சமையல் பொருட்களில் ஒன்றான தக்காளியின் விலை சீராக இருந்து வந்தது. இந்நிலையில், திடீரென நாடு முழுவதும் விலை அதிகரித்தது. சில மாநிலங்களில் விலை 100 ரூபாயை கடந்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்ததுடன் ஓட்டல் வியாபாரிகளும் பாதிக்கப்பட்டனர். தென் மாநிலங்களில் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்ததால் விலை அதிகரித்ததாக கூறப்படுகிறது. மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் நிதி காரே இது […]