சென்னை: கடந்த ஆண்டு தியேட்டரில் வெளியான மலையாளத் திரைப்படம் தான் ஊடல். இந்த படத்தில், துர்கா கிருஷ்ணா, ஜூட் அந்தனி ஜோசப், தியான் ஸ்ரீனிவாசன், இந்திரன்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ரதீஷ் ரெகுநந்தன் இயக்கி உள்ளார். ஒரே இரவில் ஒரே வீட்டில் நடக்கும் அடுத்தடுத்த மர்மத்தை மிகவும் சுவாரசியமாக இயக்குநர் கொடுத்து இருக்கிறார்.
