சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்து குளறுபடியில் ஆளுநருக்கோ, ஆளுநர் மாளிகைக்கோ தொடர்பில்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்து உள்ளது. மேலும் இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வைத்த குற்றச்சாட்டுக்கு ஆளுநர் தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் உள்ள டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் இன்று ‘ஹிந்தி மாத’ நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ […]