ஆளுநர் கலந்துகொண்ட டிடி பொதிகை தொலைக்காட்சியின் இந்தி மாத நிறைவு நாள் நிகழ்ச்சியில் திராவிடம் என்ற வார்த்தையை புறக்கணித்து பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு கண்டனம் எழுந்தது. இதற்கு விளக்கமளித்த ஆளுநர் ரவி, தமிழ்த்தாய் வாழ்த்தை துல்லியமாகக் பாடக்கூடியவன் நான் இந்த தவறு தன்னுடையது அல்ல நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த டிடி தமிழ் தொலைக்காட்சியுடையது என்று விளக்கமளித்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், “பெருமையோடு துல்லியமாக பாடுவேன் என்று விளக்கம் கொடுக்கும் ஆளுநர், உரிமையோடு […]