இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து 2024 ஒக்டோபர் 15 ஆம் திகதி திருகோணமலை செல்வநாயகபுரம் பகுதியில் மேற்கொண்டுள்ள விசேட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது விற்பனைக்கு தயார்செய்யப்பட்ட நான்கு (04) கிராம் முந்நூற்று நாற்பது (340) மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், பத்து போதை காப்ஸ்யூல்கள் (10) மற்றும் இருபது போதை மாத்திரைகளுடன் (20) இரண்டு சந்தேக நபர்கள் (02) கைது செய்யப்பட்டனர்.
அதன்படி, கிழக்கு கடற்படைக் கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் மகாவலி நிறுவனத்தின் கடற்படையினர், சர்தாபுர பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து 2024 ஒக்டோபர் 15 ஆம் திகதி திருகோணமலை செல்வநாயகபுரம் பகுதியில் மேற்கொண்டுள்ள இந்த விசேட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான நபர்களைக் கொண்ட குழுவொன்று மீது விசாரணைகளை மேற்கொண்டனர். அங்கு விற்பனைக்கு தயார்படுத்தப்பட்ட நான்கு (04) கிராம் முந்நூற்று நாற்பது (340) மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் (Methamphetamine), பத்து (10) போதை கேப்சூல்கள் மற்றும் இருபது (20) போதை மாத்திரைகளுடன் இரண்டு (02) சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 23 மற்றும் 28 வயதுடைய உப்புவெளி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேகநபர்கள் (02), ஐஸ் போதைப்பொருள், போதை கேப்சூல்கள் மற்றும் போதை மாத்திரைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.