BB Tamil 8 Promo: `நீ செஞ்சிருக்கக் கூடாது' வில்லங்க பட்டம்; கலங்கி அழும் அன்ஷிதா

12-வது நாளான இன்றைய எபிசோடில் பல எதிர்பார்ப்புகளுக்கு பதில்கள் கிடைக்கும்.

வீக்கெண்டுக்கு எபிசோடுக்கு முன்பாகவே… அதாவது விஜய் சேதுபதியின் எபிசோட் ஒளிபரப்பாகுவதற்கு முந்தைய நாள் அந்த வாரத்தில் நடந்த டாஸ்க் தொடங்கி பல எதிர்பார்ப்புகளுக்கு விடைகள் கிடைத்துவிடும். அதுபோல, இன்றைய எபிசோடின் ப்ரோமோகளை பார்க்கும்போது டாஸ்க் முடிவுகள், அதனால் கிடைக்கும் பலனை அடைவதற்கு சண்டை என பல சுவாரஸ்யங்கள் இருக்கிறதென்பதே தெரிகிறது.

ப்ரோமோ 1:

இந்த வார டாஸ்கில் வெல்லும் அணியினருக்கு நாமினேஷன் ப்ரீ பாஸ் கிடைக்கும். அந்த பாஸை வைத்து அந்த அணியினர் அவர்கள் அணியிலிருக்கும் ஒருவரை எலிமினேஷனில் இருந்து காப்பாற்றிக் கொள்ளலாம். இந்த டாஸ்கின் முதல் ரவுண்ட்டில் தீபக்கின் அறிவாற்றலால் பெண்கள் அணி வென்றது. இரண்டாவது ரவுண்டில் ஆண்கள் அணியினர் வென்றிருந்தனர். இருவரும் சமமாக இருக்கும் சூழலில் மூன்றாவது ரவுண்டில் எந்த அணி வெல்கிறதோ, அந்த அணிக்கு ஒரு நாமினேஷன் ஃப்ரீ பாஸ் கிடைக்கும். மூன்றாவது ரவுண்டில் பெண்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அந்த வெற்றியையும் பெண்கள் அணியினர் கொண்டாடியிருக்கிறார்கள்.

Boys Team

ப்ரோமோ 2:

ஒரு டாஸ்கில் ஒரு அணியிலிருந்து ஒருவர்தான் கலந்துக் கொள்ள வேண்டும் என விதி இருந்தாலே அந்த வாய்ப்புக்காக பெண்கள் அணியினர் சண்டையிட்டுக் கொள்வார்கள். கடந்த வாரம்கூட `விடுதலை பாஸ்’ என்ற அபூர்வம் ஒன்று கிடைத்தபோதிலும் அதை பெண்கள் அணி தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டு வீணாக்கிவிட்டார்கள். ஆண்கள் அணியினர் தங்களுக்குள் ஒற்றுமையாக அந்த வாய்ப்பை சட்டென தூக்கி பயன்படுத்திக் கொண்டார்கள். அதுபோல இந்த நாமினேஷன் ப்ரீ டாஸ்கில் வெற்றி பெற்ற பெண்கள் அணிக்குக் கொடுக்கப்படும் வாய்ப்பை அவர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்வார்களா என்பது சந்தேகம்தான். ப்ரோமோவிலேயே அந்த வாய்ப்பிற்காக பெண்கள் அணியினருக்கு இடையில் வாக்குவாதம் எழுந்திருப்பதைக் காண முடிகிறது.

ப்ரோமோ 3:

இந்த வாரம் இரு அணியினரும் சொந்தமாக ஒரு சேனலைத் தொடங்கி அதற்காக ஒரு ப்ரஸ் மீட் கொடுத்து அந்த சேனலை வைத்து சில டாஸ்க்குகளை நிகழ்த்த வேண்டும் என பிக் பாஸ் கூறியிருந்தார். முதல் நாள் ஒரு ஷோவை ஆண்கள் அணியினரும் பெண்கள் அணியினரும் நடத்தினார்கள். அதன் பிறகு இன்று அவரவர் அணியினரின் சேனலில் ஒரு விருது விழாவை நடத்தச் சொல்லியிருக்கிறார் பிக் பாஸ். அந்த வகையில் `டம்மி பாவா’ என்ற விருதை முத்துக்குமரனுக்கு வழங்கியிருக்கிறார்கள். அன்ஷித்தாவுக்கு `சொம்பு தூக்கி’ என்ற விருதை கொடுத்திருக்கிறார்.

Anshitha

முக்கியமாக இந்த விருதை அன்ஷித்தாவுக்கு கொடுத்தவர்தான் ஹைலைட். `செல்லம்மா’ தொடரில் அவருடைய இணைந்து நடித்திருந்த அர்ணவ்தான் அந்த விருதை அன்ஷித்தாவுக்கு கொடுத்திருக்கிறார். `இந்த விருதை வேறு யார் வழங்கியிருந்தாலும் நான் வருத்தமடைந்திருக்கமாட்டேன். ஆனால் நீ கொடுத்தது எனக்கு வலியை உண்டாக்கியிருக்கிறது’ என அர்ணவிடம் வேதனையை தெரிவித்திருக்கிறார் அன்ஷித்தா. பரஸ்பர புரிதலுடன் அதே நட்பு இவர்களுக்கு இடையில் பிக் பாஸ் வீட்டிற்குள்ளும் தொடர்ந்து. இந்தவொரு செயல் இவர்களுக்கு இடையில் மோதலை உருவாக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.