SRK: "இறுதி மூச்சு வரை நடிப்பேன்; யாராவது ஆக்‌ஷன் சொல்ல நான் சாக வேண்டும்…" – ஷாருக்கான் விருப்பம்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கடந்த ஆண்டு நடித்த மூன்று படங்களும் தலா ஆயிரம் கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளன. தற்போது தனது மகள் சுஹானா கான் நடிக்கும் கிங் என்ற படத்தில் ஷாருக்கான் கவனம் செலுத்தி வருகிறார். அப்படத்தை ஷாருக்கான் நிறுவனமே தயாரிக்கிறது.

இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் நடந்த திரைப்பட விழாவில் ஷாருக்கானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இவ்விழாவில் விருதைப் பெற்றுக்கொண்ட பிறகு அவரிடம், எப்போதும் நடித்துக்கொண்டிருப்பீர்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு, “ஆமாம்.. சாகும் நாள் வரை நடிக்க வேண்டும். யாராவது ஆக்‌ஷன் சொல்ல வேண்டும். நான் சாக வேண்டும். ஆக்‌ஷன் சொன்னவர் கட் சொல்லும்போது நான் எழுந்திருக்கக்கூடாது. இதுதான் எனது வாழ்நாள் கனவு. ஆம் நான் எப்போதும் நடிப்பதை விரும்புகிறேன்.

நான் ஒன்றும் தீவிரமான நடிகர் கிடையாது. நடிப்பைப் பற்றிய சில அற்புதமான விஷயங்களை மக்களுக்குக் காட்டினேன். வாழ்க்கையின் சந்தோஷங்களை நடிப்பின் மூலம் கொண்டாடுகிறேன். என்னைப் பொறுத்தவரை, எந்த வகையிலும் என்னால் மகிழ்ச்சியை உருவாக்க முடியும். நான் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறேன், அன்பைக் கொடுக்கிறேன். கலை, ஓவியம், பாடல், இசை – இவை அனைத்தும் எனக்கு ஒன்றுதான். எந்தவிதமான வித்தியாசமும் இல்லை.

இரண்டு நிமிடம் உங்களை மகிழ்விக்க முடிந்தால் அது அன்பு. நான் ஒருவரை 50 வருடங்கள் அன்பு செய்ய முடிந்தால் அது ஒரு பொழுதுபோக்கு. நான் ஒருவரை 30 வினாடிகள் மகிழ்விக்க முடிந்தால், அது படைப்பாற்றல். எனவே ஒரே விஷயத்திற்கு வெவ்வேறு பெயர்களை நான் காண்கிறேன். மேலும் இந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வதில் நான் மிகவும் மகிழ்கிறேன். ஒரு மணி நேரம் அல்லது அதற்கும் மேலாக மக்களை ஒரே உணர்வுடன் மகிழ்விக்கச் செய்கிறேன்.” என்று ஷாருக்கான் கூறியுள்ளார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.