ஶ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் யூனியன் முதலமைச்சராக உமர் அப்துல்லா தலைமையில் அமைச்சரவை பதவி ஏற்ற நிலையில், முதல் அமைச்சரவை கூட்டத்தில் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மேலும், ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா விரைவில் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். . அப்போது, ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க கோரிக்கை விடுப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கிடைக்க வாய்ப்பு […]