விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு அக்டோபர் 19- ம் தேதி வெளியான திரைப்படம் ‘லியோ’.
இந்தப் படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில், தீபாவளிக்கு முன்னரே ரிலீஸ் ஆனது. படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் மாபெரும் வெற்றியைப் பெற்றது. பாக்ஸ் ஆஃபீஸில் மட்டும் படம் கிட்டத்தட்ட 650 கோடிகள் வரை வசூல் செய்ததாக அப்போது தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் படம் வெளியாகி இன்றுடன் ஓர் ஆண்டு ஆன நிலையில் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், ” எத்தனையோ கற்றல்கள் , நிறைய அனுபவங்கள், பல நினைவுகள், பல உற்சாகமான தருணங்கள் இந்தப் படம் தந்திருக்கிறது. ‘லியோ’ என் மனதிற்கு நெருக்கமான படம். ‘லவ் யூ சோ மச்’ விஜய் அண்ணா.
இந்தப் படத்திற்காக வியர்வை மற்றும் ரத்தத்தை செலவழித்த படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி” என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார். படம் வெளியாகி இன்றுடன் ஒரு ஆண்டு ஆன நிலையில் ரசிகர்கள் இணையத்தில் , “#1YearOfLeo, #1YearOfIndustryHitLEO, #vijayleo” போன்ற ஹேஷ் டேக்குகளை இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இதுமட்டும் இல்லாமல், படக்குழு இன்று ‘The Chronicles of Leo’ என்ற வீடியோவை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. இதனால், ரசிகர்கள், ‘#The Chronicles of Leo’ என்ற ஹேஷ் டேக்கையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…