Selvaragavan : `எவ்ளோ வேணா லவ் பண்ணுங்க, ஊர சுத்துங்க, ஆனா…' – செல்வராகவன் கூறும் காதல் அட்வைஸ்

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். இவர், அவ்வப்போது சமூக வலைதளங்களில் வாழ்க்கையைப் பற்றி சின்ன சின்ன வீடியோக்களையும் பதிவிட்டு வருவார். அதுபோல, தற்போது காதல் பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை செல்வராகவன் பதிவிட்டிருக்கிறார்.

செல்வராகவன்

அந்த வீடியோவில் பேசும் செல்வராகவன், “இன்னைக்கு ஒரு முக்கியமான டாபிக் பத்தி சொல்றேன். காதல் தோல்வி… பார்த்த அனுபவங்கள், கூட படிச்சவங்களோட அனுபவங்களை வச்சு சின்ன சின்ன சம்பவங்களை சொல்றேன். இந்த ஜெனரேஷன் லவ் பத்தி எனக்கு தெரிஞ்சத சொல்றேன். தெரிஞ்ச பையன் ஒருத்தன் எப்பவும் போன்ல மெசேஜ் பண்ணிட்டே இருப்பான். என்னடா எப்பவும் உன்னை பொண்ணுங்க கூடதான் பாக்கறேன், எப்பவும் மெசேஜ் பண்ணிட்டே இருக்க, லவ் பண்றியான்னு கேட்டேன். அதுக்கு, `அப்டிலாம் இல்ல அண்ணா. பத்து பேர்ட கடலை போட்டு பேசி பாப்போம் ஒன்னாவது தேராதா-னு’ சொன்னான். அப்புறம் தெரிஞ்ச பொண்ணுகிட்ட, என்னம்மா எப்போ பாத்தாலும் பசங்க கூட சுத்திட்டே இருக்கியே, போன்ல பசங்க நம்பரா இருக்கு யாரையாவது லவ் பண்றியானு கேட்டேன். அதுக்கு, `அதெல்லாம் இல்ல, சும்மா ஜாலியா டைம் போகும். பசங்க இவ்ளோ பேர் பின்னாடி சுத்துறாங்கனு கெத்தா இருக்கும். லவ்-னு வீட்ல தெரிஞ்சா எங்க அப்பா அடிச்சே கொன்னுடுவாரு. கல்யாணம்னு வரும்போது சாதி, நல்லா படிச்சா பையன், என்.ஆர்.ஐ-னு அந்த மாதிரி அப்பா கட்டி வைப்பாரு. எனக்கும் அதுலதான் விருப்பம். மத்தபடி இவங்கெல்லாம் நிறைய விஷயத்துக்கு யூஸ் ஆவாங்க-னு’ சொன்னாங்க.

அப்புறம், வேற ரெண்டு பேர் ரொம்ப சீரியஸா லவ் பண்ணிட்டு இருந்தாங்க… அந்த பையன் கிட்ட, `படிக்கிற டைம் லவ் பண்ணிட்டே இருக்கியே, அந்த பொண்ணும் லவ் பண்ணுது, வீட்ல பெத்தவங்களும் ஓகே சொல்லிட்டாங்கன்னா என்னடா பண்ணுவிங்க, காலேஜ் படிச்சிட்டு இருக்கீங்க’ன்னு கேட்டதுக்கு, `உடனே கல்யாணம் பண்ணிப்பேன். சின்ன வீடா பாத்து செட்டில் ஆகிட்டு, சைக்கிள் கடை, பால் கடை வேலைக்கு சேர்ந்து அப்டியே வாழ்க்கைய பாத்துப்போம்’னு சொன்னான். இதெல்லாம் அந்த பொண்ணுக்கு தெரியுமானு கேட்டா, `தெரிஞ்சா அந்த பொண்ணு போயிடும். நீங்க கேட்டீங்க-னு சொன்னேன். முக்கால்வாசி ஒர்க்கவுட் ஆகாது’-னு சொல்லிட்டான். அப்புறம், காலேஜ் நண்பன் ஒருத்தன் பயங்கர லவ். அவனுக்கு லவ் ஏற ஏற அரியர்ஸ் ஏறிக்கிட்டே போச்சு. காலேஜ் முடியும்போது 16 அரியர்ஸ். ஆனா அந்த பொண்ணு வீட்ல எப்டியோ பேசி கல்யாணம் ஆகிடுச்சு. அந்த பொண்ணு படிக்கிற பொண்ணுங்கிறதால படிச்சு பெரிய இடத்துக்கு வேலைக்கு போச்சு. இவனும் கொஞ்சம் கொஞ்சமா அரியர்ஸ் முடிச்சு ஒரு வேலைக்கு போயிட்டான். அதுக்கப்புறம் நான் டைரக்ஷன் பக்கம் வந்துட்டேன்.

ரொம்ப நாள் கழிச்சு அந்த நண்பனை மீட் பண்ணேன். எப்படி சந்தோஷமா இருக்கீங்களானு கேட்டேன். ரெண்டு நிமிஷம் அந்த பொண்ண திட்டிட்டு, `பசங்கள விட்டுட்டு அந்த பொண்ணு போயிடுச்சு. ரொம்ப கஷ்டப்படறேன் ஹெல்ப் பண்ண முடியுமா-னு’ கேட்டான். கடைசியா இந்த சம்பவத்தை சொல்லி முடிச்சிடறேன்… காலேஜ்ல ஒரு பையன் லவ் பண்ணிட்டு இருந்தான். இருந்தாலும் எக்ஸாம் டைம் வரும்போது அந்த பொண்ணுகிட்ட சொல்லிட்டு படிப்பான். அந்த பொண்ணும் புரிஞ்சிகிட்டு எக்ஸாம் முக்கியம் படி-னு விட்டுச்சு. அந்த லவ் வளர வளர அவன் தன்னோட கடமையையும் செஞ்சிட்டே வந்தான். அந்த பொண்ணுக்கும் அவன் மேல இருக்கிற மரியாதையை ஏறிக்கிட்டே போச்சு. அந்த பையனுக்கு பெரிய இடத்துல வேலை கெடச்சது, பொண்ணுக்கும் வேலை கெடச்சது. ரெண்டு வீட்லயும் சந்தோஷமா கல்யாணம் பண்ணி வச்சாங்க. காதல் கூடவே கடமையையும் செஞ்சதால அவங்க ரெண்டு பேருக்கும் நல்ல வாழ்க்கை கெடைச்சது. கடைசியா ஒன்னு சொல்றேன்… லவ் பண்ணுங்க, எவ்ளோ வேணா ஊர சுத்துங்க, ஆனா கடமையை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க” என்று கூறினார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.