பிரேக்கிங் நியூஸ் கலாச்சாரம் கேரள முதல்வர் விமர்சனம்

கொச்சி: ஊடகங்களின் பிரேக்கிங் நியூஸ் கலாச்சாரம் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சனம் செய்துள்ளார். கேரள மாநிலம் கொச்சியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் பினராயி விஜயன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

தற்போது ஊடகங்களில் செய்திகளை சரியான முறையில் வழங்குவதைக் காட்டிலும் அந்த செய்திகளுக்குத்தான் அதிக முக்கியத்துவத்தை ஊடகங்கள் தருகின்றன. தற்போது ஊடகங்களில் அதிகம் பிரேக்கிங் நியூஸ் கலாச்சாரத்தைப் பார்க்கிறேன். அந்த பிரேக்கிங் நியூஸில் இலக்கணப் பிழைகள். எழுத்துப் பிழைகள் கூட அதிகம் தென்படுகின்றன. அதைத் தவிர்க்காமலேயே பிரேக்கிங் நியூஸ் என்ற பெயரில் செய்திகள் ஊடகங்களில் வெளியாகின்றன. ஊடகத் துறையில் உள்ளவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

தேசிய ஊடகங்களுடன் ஒப்பிடும்போது மலையாள ஊடகங்கள் வளர்ச்சி மற்றும் நலன் போன்ற துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் தனிப்பட்ட சுதந்திரத்தை ஊடகங்கள் பறிக்கக் கூடாது. பத்திரிகையின் நெறிமுறைகளை ஊடகங்கள் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.