Bigg Boss: ஜாக்குலின், தர்ஷாவை கடிந்துகொண்ட விஜய் சேதுபதி – இன்றைய எபிசோடில் என்ன நடக்கப் போகிறது?

பிக் பாஸ் சீசன் 8-ன் இன்றைய நாளுக்கான இரண்டு ப்ரோமோக்கள் வெளியாகி இருக்கிறது.

நேற்றைய எபிசோடில் வழக்கம்போல விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் பல கேள்விகளை எழுப்பி விசாரித்தார். குறிப்பாக, சம்மந்தி பஞ்சாயத்து விறுவிறுப்பாக இருந்தது. இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் ஜாக்குலின் விதிமுறைகளை மீறியது குறித்து பேசப்படுகிறது. இதில் ஜாக்குலின் செய்த தவறு குறித்து விஜய் சேதுபதி ஒவ்வொரு விஷயமாக கேட்கிறார். விதிமுறைகளை மீறியதற்கு தண்டனை கொடுக்கப்பட்டால், என்னை அனைவரும் டார்கெட் செய்கிறார்கள் என்று சொல்கிறீர்கள்.

தர்ஷா

நடந்த விஷயத்தை விசாரித்தால், அதில் உங்களுடைய தவறு இருக்கிறது என ஜாக்குலினை வெளுத்து வாங்குகிறார் விஜய் சேதுபதி. இரண்டாவது ப்ரோமோவில், என்னுடைய டீம் பத்தி தப்பா பேசினதா தர்ஷா சொல்லி இருக்கிறார் என்று அர்னவ் சொன்னவுடன், நீங்கள் சொன்னீங்களா? இல்லையா? என்று தர்ஷாவை விஜய் சேதுபதி கேட்டு இருக்கிறார். அதற்கு அவர், சொன்ன மாதிரிதான் இருக்கிறது என்று சொல்ல , நீங்கள் சொன்னீங்களா ? இல்லையானு ? மட்டும் சொல்லுங்கள் என்று கடுமையாக கேட்கிறார். அதற்கு தர்ஷாவும் தயக்கத்துடன் சொன்னேன் என்று விளக்கம் கொடுக்கிறார். என்ன நடக்கப்போகிறது என்று இன்றைய எபிசோடில் பார்த்தால் தெரிந்துவிடும். வெளியான இரண்டு ப்ரோமோக்களும் இங்கே!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.