IND Vs NZ : 36 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் வெற்றி பெற்ற நியூசிலாந்து!

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி, நியூசிலாந்து அணி வெற்றி பெற்றிருக்கிறது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அக்டோபர் 16ஆம் தேதி மழையால் தாமதமாக துவங்கிய முதல் ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்தியா 46க்கு ஆல் அவுட்டானது. பின்னர் விளையாடிய நியூசிலாந்து 402 ரன்கள் குவித்தது. அதன் பின் இரண்டாவது இன்னிங்ஸில் பதிலடி தந்த இந்திய அணி 462 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி

நியூசிலாந்து அணிக்கு 107 ரன்கள் மட்டுமே வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி ஐந்தாம் நாளான இன்று அந்த இலக்கை எளிதாக அடைந்து வெற்றி பெற்றிருக்கிறது. 27.4 ஓவர்களில் 110 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை நியூசிலாந்து அணி எட்டி இருக்கிறது. நியூசிலாந்து அணி 36 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் வெற்றி பெற்று சாதனைப் படைத்திருக்கிறது. பலரும் நியூசிலாந்து அணிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.