சென்னை: தமிழில் ஹீரோவாகவே என்ட்ரி கொடுத்தார் நடிகர் ரகுவரன். தன்னுடைய தனிப்பட்ட குரல் மற்றும் ஸ்டைலால் இவருக்கு அடுத்தடுத்து வில்லன் வேடங்கள் வந்தன. தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ரகுவரன். ரகுவரன் நடிகை ரோகிணியை காதலித்து திருமணம் செய்த நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
