டெல்லி நேற்று ஒரே நாளில் 24 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியாவில் இருந்து உள்நாட்டு நகரங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் பல்வேறு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் இ-மெயில்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாக நடந்து வருகிறது.. இந்த மிரட்டல்களை தொடர்ந்து சோதனை நடத்தும்போது அவை வெறும் புரளிகளாக இருப்பது அம்பலமாகி வருகிறது. பல்வேறு விமான நிலையங்களிலும் வெடிகுண்டு புரளிகள் கிளப்பி விடப்படுகின்றன. இது நாடு முழுவதும் விமான பயணிகள் […]
