65 வயதுக்கு உட்பட்ட ஓய்வுபெற்ற ஊழியர்களை மறுநியமனம் செய்யும் ரயில்வே

புதுடெல்லி:ரயில்வே துறையில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிற நிலையில், அதை ஈடு செய்ய25,000 இடங்களுக்கு ஆட்களை நியமனம் செய்யும் நடவடிக்கையை ரயில்வே வாரியம் முன்னெடுத்துள்ளது. இந்த இடங்களுக்கு, ஏற்கெனவே ரயில்வேயில் வேலை பார்த்து ஓய்வுபெற்ற 65 வயதுக்குட்பட்ட நபர்களையும் மறுநியமனம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ரயில்வேயில் ஓய்வுபெற்ற 65 வயதுக்குட்பட்டவர்கள், சூப்பர்வைசர் முதல் டிராக் மேன் வரையில் பல்வேறு வேலைகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.

உடல் தகுதி: அவர்களின் கடைசிஐந்து ஆண்டுகால பணி நடத்தைஅலசப்பட்டு, அவர்களின் உடற்தகுதியைப் பொறுத்து வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர். 2ஆண்டுகள் வரையில் அந்த வேலையில் தற்காலிக ஊழியர்களாக பணியாற்ற முடியும். அவர்களின் செயல்பாடுகளைப் பொறுத்து பணி நீட்டிப்பு வழங்கப்படும்.

மறுநியமனம் செய்யப்படுபவர்களுக்கு, அடிப்படை பென்சன்தொகை மட்டும் கழிக்கப்பட்டு அவர்கள் இறுதியாக பெற்ற மாதம் ஊதியம் வழங்கப்படும். பயணப்படி வழங்கப்படும். ஆனால், ஊதிய உயர்வு வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற ஊழியர்களை மறுநியமனம் செய்யும் செயல்பாடுகளை மண்டல மேலாளர்கள் மேற்கொள்வர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்கள் பற்றாக்குறை: சமீபமாக ரயில்வே விபத்துகள் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகின்றன. ஊழியர்கள் பற்றாக்குறையும் இந்த விபத்துகள் நடைபெறுவதற்கான காரனங்களில் ஒன்று என்று கூறப்பட்டு வருகிற நிலையில், ரயில்வே துறை, அனைத்து மண்டலங்களிலும் தேவையான இடங்களுக்கு ஆட்களை நியமனம் செய்யும் முன்னெடுப்பை தொடங்கியுள்ளது.

இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி திணறிவரும் நிலையில், ஓய்வு பெற்றவர்களை மீண்டும் மறுநியமனம் செய்வது மோசமான முன்னெடுப்பு என்று பல்வேறுதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.