Kanguva: “உங்கள் குடும்பத்தை எப்போதும் விட்டுக்கொடுக்காதீர்கள்!'' – வைரலாகும் சூர்யா டாக்

‘கங்குவா’ புரொமோஷன் நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்களிடம் சூர்யா பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சூர்யா நடிப்பில் `சிறுத்தை’ சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் `கங்குவா’. மிகப் பிரமாண்டமான பொருள்செலவில் வரலாற்றுப் புனைவாக உருவாகியுள்ள ‘கங்குவா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி, பாபி தியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

Kanguva | கங்குவா

வரலாற்றுப் பின்னணியுடன் நிகழ்காலச் சம்பவங்களை இணைத்து வித்தியாசமான படைப்பை இயக்குநர் சிவா உருவாக்கியிருக்கிறார். இத்திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கல்லூரி மாணவர்களிடம் சூர்யா பேசியிருக்கிறார். தற்போது அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாணவர்களிடம் பேசிய சூர்யா, ” ‘ பாய்ஸ் & கர்ல்ஸ் , நல்ல பசங்களுக்கு நல்ல பொண்ணுங்க கிடைப்பாங்க. நல்ல பொண்ணுங்களுக்கு நல்ல பசங்க கிடைப்பாங்க. வாழ்க்கையில் பார்க்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது. உங்கள் குடும்பம், நட்பு மற்றும் உங்கள் நம்பிக்கைகளை எப்போதும் விட்டுக்கொடுக்காதீர்கள்.

கங்குவா படக்குழு

எது வேண்டுமானாலும் நடக்கலாம். நீங்கள் ஆசைப்படும் எல்லாமே நடந்துவிடாது ஆனால் உங்களுக்கு தேவையான எல்லா விஷயங்களும் நடக்கும். ‘லைஃப் இஸ் பியூட்டிஃபுல்’ என சூர்யா கல்லூரி மாணவர்களிடம் பேசியிருக்கிறார். சூர்யாவுடன் கங்குவா படத்தின் நாயகி திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.