அம்பாறை எக்கல்லோயா சுற்றுலா விடுதி மற்றும் றிவர்ஸ்டன் சுற்றுலா விடுதிகளை (தும்பர வனவிடுதி) புனரமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எக்கல்லோயா சுற்றுலா விடுதி மற்றும் றிவர்ஸ்டன் சுற்றுலா விடுதிகளை நவீனமயப்படுத்துவதற்கான பணிகளை பொறியியல் பணிகள் தொடர்பான மத்திய ஆலோசனைப் பணியகத்தின் மேற்பார்வையின் கீழ் மத்திய பொறியியல் சேவைகள் தனியார் கம்பனிகள் மூலம் பூர்த்தி செய்வதற்காக நேற்று (21.10.2024) நடைபெற்ற அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான சுற்றுலா விடுதிகள் மற்றும் சுற்றுலா விடுதிகள் உயரிய பயனைப் பெறும் வகையில் பொருத்தமான பொறிமுறையை விதந்துரைப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விதந்துரைகளின் அடிப்படையில் நவீனமயப்படுத்த வேண்டிய 09 விடுதிகள் வனப்பாதுகாப்புத் திணைக்களத்தால் அடையாளங் காணப்பட்டுள்ளன.
அதற்காக 166.93 மில்லியன் ரூபாய்கள் மதிப்பீட்டுத்தொகை கிடைக்கப் பெற்றுள்ளது.
இது தொடர்பாக சுற்றாடல், வனசீவராசிகள், வனவளங்கள், நீர் வழங்கல், பெருந்தோட்டம் மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை இவ்வாறு அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.