அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு முகமது ஷமி இந்தியாவுக்காக எந்த ஒரு போட்டியிலும் விளையாடவில்லை. இந்நிலையில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் உடற்தகுதி குறித்தான கவலை இந்திய ரசிகர்களுக்கு தற்போது அதிகமாகி உள்ளது. கடந்த ஆண்டு 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு காயம் காரணமாக எந்த ஒரு போட்டியிலும் ஷமி விளையாடவில்லை. இப்போது தனது காயம் குறித்து ஒரு முக்கிய அப்டேட்டை வழங்கியுள்ளார், காலில் வலி முழுவதும் சரியாகிவிட்டது என்று தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் நவம்பர் 22 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் நடைபெற பார்டர்-கவாஸ்கர் தொடரில் விளையாட ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இது இந்திய அணியின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூருவில் நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் முடிந்ததும் முகமது ஷமி வலைகளில் பந்து வீசி வந்தார்.
கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஷமி நீண்ட நாட்களாக ஓய்வில் இருந்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் மீண்டும் முழு நேர பயிற்சியில் ஈடுபட்டார். ஆனால் ஷமியின் முழங்கால்களில் மீண்டும் வீக்கம் ஏற்பட்டதாக கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்து இருந்தார். இதனால் இந்த ஆண்டு முழுவதும் ஷமி விளையாடமாட்டாரா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு ஷமி தற்போது பதில் அளித்துள்ளார். “நேற்று நான் எப்படி பந்து வீசினேன் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனது கால்களுக்கு அதிக சுமை கொடுக்காமல் இருந்து வருகிறேன். ஆனால் தற்போது எனது முழு வேகத்தில் பந்துவீச ஆரம்பித்தேன்” சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் ஷமி செய்தியாளர்களிடம் கூறினார்.
Ahhh Shami is hereee#INDvNZ pic.twitter.com/QcT4OgcytZ
— Aniket (@cricketwithab) October 20, 2024
Shami on his chances of touring Australia after a month. pic.twitter.com/G8Uw04dDZg
— Vimalalwa) October 21, 2024
“தற்போது நான் 100 சதவீதம் வலி இல்லாமல் இருக்கிறேன். ஆஸ்திரேலிய தொடரில் நான் இருப்பேனா என்று பலரும் பல நாட்களாக யோசித்து வருகின்றனர். ஆனால் அது பற்றி இறுதி முடிவு எடுக்க இன்னும் சிறிது நேரம் ஆகும். ஆஸ்திரேலியா தொடருக்கு முன்பு எனது முழு உடற்தகுதியை எப்படி உறுதிசெய்வது மற்றும் நான் எவ்வளவு வலிமையாக இருக்க முடியும் என்பதை மட்டுமே தற்போது முழுவதுமாக யோசித்து வருகிறேன். ஆஸ்திரேலியாவில் இந்திய அணிக்கு எந்த மாதிரியான வீரர்கள் தேவை என்பது எனக்கு தெரியும். அங்கு விளையாட வேண்டும் என்றால் நான் மைதானத்தில் அதிக நேரம் செலவிட வேண்டும்” என்று முகமது ஷமி தெரிவித்துள்ளார். பெங்களூருவில் நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பு முகமது ஷமியின் பிட்னஸ் குறித்து ரோஹித் சர்மா கூறியிருந்தார்.