சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னை தீவுத் திடலில் தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைப்பதற்கு, கூட்டுறவு சங்கம் மூலம் டெண்டர் விட சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. முன்னதாக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் வெளியிடப்பட்ட டெண்டரை உயர் நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், தற்போது கூட்டுறவு சங்கம் மூலம் டெண்டர் விட அனுமதி அளித்துள்ளது. நடப்பாண்டு தீபாவளி பண்டிகையையொட்டி, தீவுத்திடலில் 50 பட்டாசுக் கடைகள் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், 46 கடைகள் பட்டாசு விற்பனையாளர்களுக்கும், மீதமுள்ள […]