மதுரை: "ஆஸ்பத்திரிக்குக் கூட 5 கிமீ செல்ல வேண்டியுள்ளது" – பேருந்து வசதி கோரும் சித்தாலி கிராமம்

மதுரை மாவட்டம், கள்ளிக்குடி வட்டம், வில்லூர் பிட்-2 பகுதியைச் சேர்ந்த கிராமம் சித்தாலி. இந்த ஊரில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குப் பேருந்து வசதி இல்லாததால், ஊர் மக்கள் 1.25 கி.மீ., தொலைவிற்கு நடந்து சென்று பேருந்தில் ஏற வேண்டியுள்ளது. இல்லையென்றால் 1.5 கி.மீ., அருகிலுள்ள கவசக்கோட்டை வழியாக வந்து செல்லும், கல்லுப்பட்டி பேருந்தைப் பிடிக்க வேண்டியுள்ளது.

சித்தாலியில் 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிக்கூடம் உள்ளது. அதற்கு மேல் பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்கள் அருகிலுள்ள ஊர்களான மறவபட்டி, வில்லுர், புளியங்குளம், T.கல்லுப்பட்டிக்கு மேற்படிப்புக்காகச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மருத்துவமனைக்குக் கூட 5 கி.மி., தொலைவிலுள்ள வில்லூர் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திற்குச் செல்ல வேண்டும். இல்லையென்றால் விருதுநகர் அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியுள்ளது.

இங்குள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயம் சார்ந்த தொழிலையே செய்கின்றனர். ஆவாரம்பூ உள்ளிட்ட மூலிகைகளைச் சேகரித்து பக்கத்து நகரங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். சிலர் கட்டுமான பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

பேருந்து வசதி இல்லாததால், அவசர மருத்துவமனை, உயர் கல்வி நிலையம் மட்டுமல்லாமல், அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும், திருமணம் போன்ற விழாக்களில் கலந்து கொள்வதற்கும், பல்வேறு பணிகளுக்கும் செல்வதற்கும் சிரமப்பட்டு வருகின்றனர்.

Sithali Vilage

“எங்கள் கிராம மக்கள் சிரமமின்றி வெளியில் சென்றுவர, விருதுநகர் முதல் மறவபட்டி செல்லும் பேருந்து எங்கள் ஊருக்குள்ளும் வருமாறு வழிவகை செய்ய வேண்டும். காரியாபட்டியிலிருந்து கல்லுப்பட்டி செல்லும் பேருந்து கவசக்கோட்டை வந்துதான் செல்கிறது. இந்த பேருந்தும் சித்தாலிக்குள் சென்று திரும்ப அரசுப் போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்த ஊர் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.